தலைமையாசிரியருக்கு மத்திய அரசு விருது


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான கல்விச் சேவை புரிந்தமைக்காக, தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2012ம்
ஆண்டுக்கான, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேலு தேர்வாகியுள்ளார். இவர் பணியாற்றிய பள்ளிகளில் மாணவர்கள் கல்வி வளர்ச்சி, பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல், பள்ளி படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்களின் உயர்கல்விக்கு சரியான வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார். தேசிய விருதுக்கு
தேர்வுபெற்ற இவருக்கு, செப்., 5ம் தேதி, டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வழங்குகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...