மதுரையில் புத்தகத் திருவிழா ஆக., 30 ல் ஆரம்பம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

மதுரை தமுக்கம் மைதானத்தில், 8வது புத்தகத் திருவிழா ஆக., 30ல் துவங்கி, செப்., 9 வரை நடக்க உள்ளது.
மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத்
திருவிழா நடக்கிறது. இந்தாண்டு ஆக., 30, மாலை 6 மணிக்கு விழா துவங்குகிறது. அமைச்சர் வைகை செல்வன் துவக்கி வைக்கிறார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா, கலெக்டர் சுப்ரமணியன் பங்கேற்க உள்ளனர். ஆக., 31, முதல் தினமும் மாலை 6 மணிக்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள் என பலதரப்பினரும் பங்கேற்று பேச உள்ளனர். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.

அனுமதி இலவசம்:

செப்., 1ம் தேதி, காலை 9 மணிக்கு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடக்கிறது. இதில் 5 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். செப்., 2ம் தேதி, மாலை 6 மணிக்கு, "இலக்கியங்கள் மனித வாழ்க்கைக்கு மருந்தா, விருந்தா' என்ற தலைப்பில் பட்டிமன்றம், செப்., 3ம் தேதி, மாலை 6 மணிக்கு, "தமிழுக்கு ஏற்றம் தருவது இயல் தமிழா, இசைத்தமிழா, நாடகத் தமிழா' என்னும் இயலிசை பட்டிமன்றம், செப்., 4ம் தேதி, காலை 9 மணிக்கு, "மதுரை பேசுகிறது'-சொல்லரங்கம் நடைபெறும். 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு "பொய்மைச் சிறுமதி போக்கு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடக்க உள்ளது. செப்.,5ம் தேதி காலை 9 மணிக்கு, "தமிழா பேதமை அகற்று' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடக்க உள்ளது. செப்.,6ல் சங்கீத வித்யாலயா மாணவர்களின் பாட்டும், நாட்டியமும் நிகழ்ச்சி, செப்.,7ல் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை, "பபாசி' அமைப்பின் தலைவர் சண்முகம், செயலாளர் வைரவன், பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர். "தினமலர்' ஊடக உதவி வழங்குகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...