பதவி உயர்வு கிடைத்தும் நிம்மதி இல்லை: மன உளைச்சலில் டி.இ.ஒ.,க்கள்

பள்ளிக் கல்வித் துறையில் சமீபத்தில் பதவி உயர்வு பெற்ற, மாவட்ட கல்வி அலுவர்கள் (டி.இ.ஓ.,க்கள்) கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி
இருப்பதாக சர்ச்சை வெளியாகி எழுந்துள்ளது.

இத்துறையில் எப்போதும் இல்லாத வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்கள் பதவி உயர்வில் இந்தாண்டு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, இயக்குனர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட பின், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், டி.இ.ஓ.,க்கள் என அடுத்தடுத்து பதவி உயர்வு அளிக்கப்படும். ஆனால், இந்தாண்டு எல்லாம் தலைகீழாக நடந்தது. இதனால், 32 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள், இன்னும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம், பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 49 பேருக்கு, டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அருகே உள்ள மாவட்டங்களில் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில், வட மாவட்டங்களில் பணியாற்றியவர்கள், தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வட மாவட்டங்களுக்கும் "பணிமாற்றம்' என்ற பெயரில் தூக்கியடிக்கப்பட்டனர். இதனால், வேறு வழியில்லாமல் மனக்குழப்பத்துடன் பணியில் சேர்ந்தனர்.

மீண்டும் "டிரான்ஸ்பர்':

இந்நிலையில், பதவி உயர்வில் தொலைதூர மாவட்டங்களில் பொறுப்பேற்ற 49 டி.இ.ஓ.,க்களில், ஒரே மாதத்தில் 20 பேர் வரை அவர்கள் சொந்த மாவட்டம் அல்லது அருகே உள்ள மாவட்டங்களில் காலியாக இருந்த இடங்களுக்கு "ஏதோ காரணத்திற்காக' மீண்டும் பணிமாற்றம் பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதே வழியில், மேலும் பலர் பணிமாற்றம் பெற முயற்சி நடக்கிறது. இதனால், டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வில் உள்ள 27 பேர் "பேனல்' கண்டுகொள்ளப்படவில்லை என்ற புகாரும் இத்துறையில் எழுந்துள்ளது.

பதவி உயர்வு டி.இ.ஓ.,க்கள் சிலர் கூறியதாவது:

டி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்கும்போதே அருகே உள்ள மாவட்டங்களில் முதலிலேயே பணிவாய்ப்பு அளிக்கலாம். ஆனால், தூரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு "டிரான்ஸ்பர்' போட்டுவிட்டு, பின் "பேரம் அடிப்படையில்' மீண்டும் சொந்த மாவட்டம் அல்லது அருகே உள்ள மாவட்டங்களுக்கு "டிரான்ஸ்பர்' போடுகின்றனர். இதனால், சந்தோஷமாக நினைக்க வேண்டிய பதவி உயர்வு, எங்களுக்கு சோதனையாக அமைந்துள்ளது. தமிழக முதல்வர் இப்பிரச்னை குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும், என்றனர்.

Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...