மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, "செஸ்' போட்டி
துவங்கியது. மாணவர்களிடையே, அறிவாற்றலை வளர்க்க வேண்டும் என்பதற்காக, பள்ளி
அளவில் துவங்கி, மாநில அளவில் வரைக்கும்,
பல்வேறு நிலைகளில், "செஸ்' போட்டிகளை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, போட்டிகள் துவங்கின. சென்னை மாவட்டத்தில், 400 பள்ளிகளில் போட்டிகள் நடந்தன. அசோக் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளை, முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டார். செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.