தொழிலாளர்களின் வாரிசுகள் டாக்டராக வாய்ப்பு: செப்., 5ம் தேதி கலந்தாய்வு

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லூரியில், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன. இதற்கான கலந்தாய்வு, செப்., 5ம் தேதி துவங்குகிறது.
சென்னை கே.கே.நகரில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை உள்ளது. இதில், முதுநிலை மருத்துவ படிப்புகள் மட்டுமே உள்ளன. நடப்பு நிதியாண்டு முதல், எம்.பி.பி.எஸ்., படிப்புகள் துவங்கவும், இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 100 இடங்கள் கொண்டதாக, இந்த கல்லூரி செயல்படும். மாநிலத்திற்காக, 65 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. இவை, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நிலையில், மீதமுள்ள இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், 15 இடங்கள் ஒதுக்கப்படும். மீதமுள்ள, 20 இடங்கள், இ.எஸ்.ஐ., மருத்துவமனை தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, பணியாற்றுவோரின் வாரிசுகள் தகுதி பெறுவர். இதுபோன்று, கோல்கட்டா - 52, பெங்களூரு - 45 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையையும் சேர்த்து, 162 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வாரிசுகளுக்கு, எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீடு செய்வது இதுவே முதல் முறை. அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் வாரிசுகள், "ரேங்க்' பட்டியல் தயாரித்து, கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு, செப்., 5ம் தேதி நடக்க உள்ளது. நடக்கும் இடம், "ரேங்க்' பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என, தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...