சென்னை தலைமை செயலகத்தில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நவீன
உடற்பயிற்சி கூடம் அமைக்க முதல்–அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தலைமை செயலக ஊழியர்களுக்கு...
தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகத்தில் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலையினால், அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித்திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே அனைத்து வசதிகளுடன்கூடிய உடற்பயிற்சி கூடங்களை தலைமைச்செயலகத்தில் அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நவீன உடற்பயிற்சி கூடம்
இதன் அடிப்படையில் ரூ.50 லட்சம் செலவில் 2 ஆயிரம் சதுர அடியளவில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக்கூடமும், 1,800 சதுர அடியளவில் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படும். இதில் 20 வகையான நவீன உடற்பயிற்சி கருவிகளை அமைக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள், நல்ல ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவதற்கு வழிவகை செய்யும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.