விமானப் படையில் கமிஷன் அதிகாரி பணி-DINAMANI

இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மிக முக்கியமான இந்திய விமானப் படையின் மெட்டீயோராலாஜிக்கல் பிரிவில் கமிஷன் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என்ற இரு பாலரும்
விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்கலுடன் இளங்கலையில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். பின்னர் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், அப்ளைடு பிஸிக்ஸ், ஓஷனோகிராபி, என்விரான்மெண்டல் பயாலஜி போன்ற ஏதாவது ஒரு
பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதி: பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மி., உயரமும் அதற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் உயரம் குறைந்த பட்சம் 157.5 செ.மி., இருப்பதோடு அதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இன்டலிஜென்ஸ் டெஸ்ட், நேர்காணல், மருத்துவப் பரிசோதனை போன்ற நிலைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, பின்வரும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: சாதாரண அஞ்சலில் 31.08.2013-க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவருடன் சுய விலாசமிட்ட மற்றும் ரூ.27/-க்கு ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...