காலாண்டு தேர்வு வினாத்தாளில் குழப்பம்: நடத்தாத பாடங்களில் கேள்விகள்

மாநிலத்தில், மதுரை உட்பட சில மாவட்டங்களில் பிளஸ் 2 காலாண்டு தேர்வில், அறிவியல் பாடங்களில் நடத்தாத பாடங்களில
இருந்து, வினாக்கள் இடம்பெற்றுள்ள. முன்பு 10, பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில், அந்தந்த மாவட்டங்களில் வினாக்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான"காமன் வினாத்தாள்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது. காலாண்டு தேர்வுக்கான "பாடத்திட்டம்' ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் வாரத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்படும். இதன்படி, மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஆனால், இந்தாண்டு மதுரை உட்பட பல மாவட்டங்களுக்கு பிளஸ் 2 "பாடத்திட்டம்' அனுப்பி வைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்து உள்ளது.இதனால், பிளஸ் 2 இயற்பியல், வேதியியல் வினாத்தாளில் ஆசிரியர்கள் நடத்தாத பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: காலாண்டு தேர்வுக்கான பாடத்திட்டம், ஜூன் முதல் வாரத்தில் சி.இ.ஓ., அலுவலகம் மூலம்,
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும். இந்தாண்டு பிளஸ் 2 க்கான "பாடத்திட்டம்' இதுவரை தலைமையாசிரியர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், செப்.,20 ல் நடந்த வேதியியல் தேர்வில், 13 அலகுகளே நடத்தி முடித்த நிலையில், 17 அலகுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. செப்.,18 ல் நடந்த இயற்பியல் தேர்வில், கூடுதலாக 6 வது அலகில் இருந்தும், செப்.,14 ல், நடந்த கணிதம் தேர்வில், கூடுதலாக 5 வது அலகில் இருந்தும் (நடத்தாத பாடங்கள்) வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. "பாடத்திட்டத்தை' முன்கூட்டியே வழங்கியிருந்தால், உரிய பாடங்களை நடத்தி யிருப்போம், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...