பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் சம்பளம் குறைப்பு

பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற
வாய்மொழி உத்தரவால், செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் "கட்' டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், விவசாயம், கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில், சிறப்பு வகுப்புக்கள் எடுக்கலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த காலங்களில் பணிக்கு வந்துள்ளனர். தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வு செப்., 21ல் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறையில், பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வர வேண்டாம், என வட்டார வள மைய அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இதனால், 12 அரை நாட்களுக்கு பதிலாக, 9 அரை நாட்கள் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு, 5000 ரூபாய் சம்பளத்தில் 1,300 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...