வயது வரம்பை நீக்கக்கோரி குரூப் –1 தேர்வர்கள் உண்ணாவிரதம்

குரூப்–1 தேர்வு எழுதும் பட்டதாரிகள் பட்டதாரி தேன்மொழி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே
உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்கள் கூறியதாவது:– கடந்த 2001–ம் ஆண்டு முதல் இதுவரை 12 வருடங்களில் 5 முறை மட்டுமே குரூப்–1 தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
ஏராளமான மாணவர்கள் ஐ.ஏ.எஸ்.தேர்வை எழுதுகிறார்கள். அதில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் பிறகு குரூப்–1 தேர்வை எழுத வரும்போது அவர்களுக்கு வயது வரம்பு அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்கள் குரூப்–1 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது.
குரூப்–1 தேர்வை எழுத தமிழ்நாட்டில் அதிக பட்ச வயது 35 ஆகும். ஆனால் குஜராத், கேரளா, அரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் உள்பட அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு 45 ஆக உள்ளது.
எனவே குரூப்–1 தேர்வு எழுதுவோர் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரதம் இருந்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன், டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் பேசினார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...