விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்


குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், கூறியதாவது: குரூப் 2 தேர்வுக்கு, 6
லட்சத்து, 85 ஆயிரத்து, 198 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணத்தை, வரும், 8ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு, டிச., 1ம் தேதி, 115இடங்களி"ல் நடக்கிறது. துணை வணிகவரி அலுவலர் பணியிடத்திற்கு, 66 பேர், இந்து அறநிலையத்துறையில், "ஆடிட் இன்ஸ்பெக்டர்' பணிக்கு, 39 பேர் உட்பட, 1,064 பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. 12 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. விரைவில்,இதன் முடிவு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...