டி.டி., கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியாது: அரசு திட்டவட்டம்

 டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியாது,'' என, நேற்று வரை சுகாதாரத் துறை அமைச்சராக
இருந்த வீரமணி, திட்டவட்டமாக தெரிவித்தார். 
திருவள்ளூரில் உள்ள டி.டி., மருத்துவக் கல்லூரிக்கு, மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் இல்லை. இதனால், அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கையை முன்வைத்து, மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். 
"டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கவன ஈர்ப்புத் தீர்மானத்தை, சட்டசபையில் நேற்று கொண்டு வந்தார். 

இதற்கு, பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி கூறியதாவது: டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2011 12; 2012 13ல் மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. இருந்தும், மாணவர்களை சேர்த்துள்ளனர். "அனுமதியில்லாத கல்லூரிகளில் சேர வேண்டாம்; மீறி சேர்ந்தால், அதற்கு மருத்துவக் கவுன்சில் பொறுப்பில்லை' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டி.டி., கல்லூரி மாணவர்களுக்கும் இது தெரியும். அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது என்ற விவரம், சுகாதாரத் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பிரச்னையில் மாநில அரசு தலையிட முடியாது. வேண்டுமானால், மருத்துவம் சாரா படிப்புகளான, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, தகவல் தொழில்நுட்பம், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில்
சேர்ந்து படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளோம். எனவே, டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க முடியாது. இவ்வாறு, அமைச்சர் வீரமணி கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...