சேத்தியா தோப்பை அடுத்த தர்மநல்லூரில், பெருங்கற்காலம், 12ம் நூற்றாண்டு, 17ம் நூற்றாண்டு ஆகிய காலக்கட்டங்களை சேர்ந்த, மக்கள் வாழ்விடங்களும், அவர்கள் பயன்படுத்திய
பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசு இப்பகுதியில், அகழாய்வு செய்தால், இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க, பல்வேறு ஆதாரங்கள் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது, தர்மநல்லூர். இந்த ஊரின் தெற்கு பகுதியிலுள்ள, பெரியதோப்பு பகுதியில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், சிவராமகிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்ததில், பள்ளமான பகுதியில், பெருங்கற்கால பொருட்களும், மேடான பகுதியில், சுடுமண் உறை கேணியும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், சங்க கால குடியிருப்புகளை அடுத்து, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் உறைகேணியும், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு : அங்குள்ள செங்கற்களை ஆராய்ந்தபோது, தர்மநல்லூர், பெரியதோப்பில், கி.மு., 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய, மக்கள் வசித்த குடியிருப்பு இருந்தது, தெரியவந்தது. அச்செங்கற்கள், 8 செ.மீ., உயரம்; 24 செ.மீ., அகலம்; 42 செ.மீ., நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. செங்கற்களின் வடிவமைப்பில் இருந்து, மக்களின் குடியிருப்பு வீடுகள் ஒவ்வொன்றும், 5 சென்டி மீட்டர் நீள அகலத்தில் அமைந்திருக்கலாம். இப் பகுதியின் மேற்பரப்பில், கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், கல்லினால் ஆன திருகை, பழுப்பு நிற கல்மணி, சுடுமண் உருவம், சுடுமண் சில்லு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாண்டி ஆட்டம் : 100 ஆண்டுக்கு முன், தானியங்கள் அரைப்பதற்கு பயன்படும் திருகையை போல், பெருங்கற்கால திருகைகளும் இருந்துள்ளன. அக்காலத்தில், தமிழர்களின் உடல் பலம் அதிகமாக இருந்ததால், திருகையின் சிறு ஓட்டை பகுதியில் விரல் வைத்து, திருகை பயன்படுத்தி உள்ளனர்.
காலமாற்றத்தில், விரல் பயன்படுத்திய இடத்தில், தற்போது குச்சி அமைந்து உள்ளது. அதே போல், தற்போது, பாண்டி ஆட்டம் ஆடுவதற்கு பயன்படுத்தப்படும் பானை ஓட்டு சில்லுகள், அக்காலத்தில் விளையாடுவதற்கென, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. நமது அனைத்து செயல்பாடுகளும், நாம் உருவாக்கியதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அனைத்து செயல்பாடுகளிலும், நம் முன்னோர்களின் பங்கு உள்ளது என்பதற்கு, திருகையும், சுடுமண் சில்லும் சாட்சி என்றனர், பேராசிரியர்கள்.
முதுமக்கள் தாழி : தர்மநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் உள்ளே, இறந்தவர்களுக்கு பிடித்த பொருட்களை படைப்பதற்காக, சிறிய மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், முதுமக்கள் தாழியின் மேல், துளையுள்ள மூடி அமைத்து, தாழியை மூடியுள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர்கள், சிவராம கிருஷ்ணன், கலைச்செல்வன் ஆகியோர் கூறியதாவது: இறந்தவர்களின் ஆன்மா, வெளியில் சென்று, மீண்டும் தங்களிடமே வர வேண்டும் என்பதற்காக, இத்துளை இட்டுள்ளனர். அக்கால தமிழர்கள், அறிவியலில் மட்டுமின்றி; ஆன்மிகத்திலும் தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதற்கு, துளையுடன் கூடிய, முதுமக்கள் தாழி மூடிகளே சாட்சி. அதற்காகவே, வீடுகளுக்கு மிக அருகில், முதுமக்கள் தாழிகளை வைத்துள்ளனர். தாழியின் மேல், இறந்தவர்களின் பெயர்களின் சுருக்கமான, குறியீடுகளை பயன்படுத்தி உள்ளனர். சலவையாளர்கள், துணிகள் மாறி விடக்கூடாது என்பதற்காக, தூண்களில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை போல, முதுமக்கள் தாழிகளை, அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காக, குறியீடுகள் அமைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுடுமண் உறைகேணி : பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த இடத்துக்கு அருகில், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த உறைகேணியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அ க்காலத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகேணி அங்குள்ளது. சுடுமண் கற்கள், 17 செ.மீ., உயரம் கொண்டதாக, அமைந்துள்ளது. இருப்பினும், உறைகேணியின் ஒட்டுமொத்த உயரம் அளவிடப்படவில்லை. உறைகேணி சுடுமணலின் நடுப்பகுதி, உமி, மரத்தூள் போன்றவை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரை உள்வாங்கி, சேமித்துக் கொள்வதற்கு,
இம்முறை கடைபிடிக்கப்பட்டதாக, பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், கிணறுகள் மேட்டுப்பகுதியிலும், கேணிகள், பள்ளமான பகுதிகளிலும் அமைந்திருப்பது, மரபு. இவ்விடத்தில், கேணி அமைந்திருப்பதன் மூலம், 12ம் நூற்றாண்டிலும் இப்பகுதி, பள்ளமான பகுதியாக இருந்திருக்கிறது. உறைகேணியின் அமைப்பையும், அதன் வடிவத்தையும் அளவிடுகையில், அக்கேணி, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றனர்.
கல்வெட்டு : தர்மநல்லூர் பெரியதோப்பில், வடபகுதியில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்ததில், அங்குள்ள சிவன் கோவிலுக்குச் சொந்தமான, ஐந்து ஏக்கர் இலுப்பை காடு, பெரியதோப்பில் இருந்ததாகவும், அதிலிருந்து பெறப்படும், இலுப்பை, சிவன் கோவிலுக்கு பயன்பட வேண்டும் என, செஞ்சி நாயக்கர் என்ற மன்னன் உத்தரவிட்டுள்ளதாக, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, 1739 ஆண்டை சேர்ந்தது என, பேராசிரியர்கள் குறிப்பிட்டனர். தற்போது, அப்பகுதியில் உள்ள, முட்புதரின் கல்வெட்டு உள்ளது. பழமைக்கும், புதுமைக்கும் இடையில் இருக்கும் நீண்ட தொடர்பையும், ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் வெளிப்படுத்தி உள்ளன.
தமிழக அரசு, இப்பகுதியில், அகழாய்வு மேற்கொண்டால், இன்னும் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க ஆதாரங்கள் கிடைக்கும்
கழிப்பிடமாக மாறிப்போன வரலாற்று புதையல் : நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, ஆய்வு செய்து, முதுமக்கள் தாழிகளை கண்டெடுத்தபோது, தமிழக அரசு, அப்பகுதியை பாதுகாக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். சங்ககால மக்கள் வாழிடமாக கண்டுபிடிக்கப்பட்ட, ஐந்து ஏக்கர் நிலத்திலாவது, வேலி அமைத்திருக்க வேண்டும். இல்லையெனில், அங்கு அகழ்வாராய்ச்சி செய்வதற்கான ஏற்பாடுகளையாவது செய்திருக்க வேண்டும்; அதையும் செய்யவில்லை. இதனால், அப்பகுதி சீரழிந்து வருவதுடன், இனிமேலும், உள்ளே நுழைய முடியாத நிலைக்கு மாறி வருகிறது. உள்ளூர் மக்கள், தர்மநல்லூர் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்; இது அவர்களின் தவறல்ல; அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய, மத்திய, மாநில அரசுகளின் தவறு. 1739 ஆண்டை சேர்ந்த, முக்கியமான கல்வெட்டு, அப்பகுதி முள்காட்டில் புதைந்து கிடக்கிறது. அதை மீட்டெடுத்து, அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கவேண்டும். இனிமேல், எவரும் அத்துமீறி நுழைந்து விடாத படிக்கு, முள்வேலி அமைக்கவேண்டும்; இல்லையெனில், நம் கண்முன்னே வரலாறு அழிந்துபோகும் அபாயம் உள்ளது.