உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு நாளை முதல் வரும் 14-ஆம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி தெரிவித்துள்ளது.
ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டு தோறும்
உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம், மற்றும் உலக அமைதி ஆகிய 6 துறைகளில் உலக அளவில் மாற்றம் ஏற்படுத்தியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும். இந்த பரிசினை பெறப்போகும் வல்லுநர்கள் யார் என்ற பட்டியல் நாளை முதல், 14-ஆம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் நாளை மாலை மருத்துவத்துறைக்கும், நாளை மறுதினம் இயற்பியல் துறைக்கும், 9-ஆம் தேதி வேதியியல் துறைக்கும் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. அதேபோல், 11-ஆம் தேதி பொருளாதாரம், 14-ஆம் தேதி உலக அமைதிக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இந்த பட்டியலில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறப் போவது யார் என்ற பட்டியல் வெளியிடப்படும் தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. இதற்கிடையே சிரியா விவகாரத்தில் சமாதான முயற்சி மேற்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) பெயர் 2014ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கும், ஹிக்ஸ்போசான் கண்டுபிடிப்பானது இயற்பியல் பிரிவிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.