உலகளாவிய தமிழர்கள்

1. சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்:
வெங்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952), தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும் இங்கிலாந்தின்
கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக்கழகத்தில் உயிரியலாளரும் ஆவார். அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கருஅமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கு 2009ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி:
இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி (Indra Krishnamurthy Nooyi, பிறப்பு:அக்டோபர் 28, 1955) உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆவார். இந்திரா நூயி ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பள்ளிப்படிப்பை சென்னையில் நிறைவு செய்தார். போர்பஸ் பத்திரிகை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது என்ற   சிறப்பிற்குரியவர்.

3. வி. ஏ. சிவா ஐயாதுரை:
வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு: திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுபிடிப்பாளரும், தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் (EMAIL) என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர். இவர் 1978 –ல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...