தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியாவுக்கு இரண்டாம் இடமா?

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக
தெரியவந்துள்ளது . முதலிடத்தில் செர்பியா உள்ளதாம் .
95 நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் என்றால் எப்படி பெருமைப்படாமலா இருக்க முடியும் ! ஆனால் , உண்மையில் நம் கண்முன்னால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எப்படி உள்ளது ?
அரசு சார்ந்த அத்தனை துறைகளையும் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் ஒரு சமானிய மனிதன் தகவல் தெரிந்து கொள்ள முடியாதது  உண்மைதான் .
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி அரசின் ரகசிய அறிக்கைகள் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன .
இதைத் தவிர நாட்டிற்கு குந்தகம் விளைவிக்காத எந்த தகவலையும் பொதுமக்கள் மிக எளிதில் தெரிந்து கொள்ள ஏற்படுத்தப்பட்டு தான் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்தியாவில் இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு , மே 11ம் தேதி 2005ம் ஆண்டு மக்களவையிலும் மே 12,ம் தேதி 2005ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
ஜூன் 15 2005ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21ம் தேதி 2005,ம் ஆண்டில் அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு  2005ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசின் திட்டங்களையும் அறிக்கைகளையும் பற்றி எதிர்கட்சிகள் கேட்டால் கூட அவதூறு வழக்கு போடும் போது பொதுமக்கள் எப்படி தகவல் கேட்பார்கள் . அப்படியானால் தெரிந்த கொள்ள கூடிய தகவலைக் கூட ஒரு குறிபிட்ட வரையறையில் தான் பொதுமக்கள் கேட்க முடியும் என்றான பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் எப்படி முழுமையாக இயங்கும்?
அரசியல் கட்சிகள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்டுப்படுமா ? இல்லையா ? என்று இன்னும் தெளிவு படுத்தாமல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் உலகில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...