திண்டிவனம் நல்லிகூடல் நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 35) தனியார்
நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள்
தானியா (வயது 4).
சேட்டுவின் உறவினர் மகள் பார்கவி (9) 4–ம் வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் நேற்று சேட்டுவின் வீட்டிற்கு பார்கவி வந்தார். வீட்டில் தானியாவும், பார்கவியும் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்தனர்.
மாலையில் அவர்களுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஆரஞ்சு ஜுஸ் வாங்கி கொடுத்தனர். அதை இருவரும் குடித்தார்கள். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி–மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரவு 8 மணிக்கு தானியா சிகிச்சை பலன் அளிக்காமல் செத்தார். உடனே பார்கவியை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பார்கவியும், தானியாவும் குடித்த ஆரஞ்சு ஜுஸ் விஷமாக மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரஞ்சு ஜுஸ் குடித்து பலியான மாணவி மற்றும் சிறுமியின் உடலை அவர்களது பெற்றோர் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.