பக்ரித் பண்டிகை

(ஈத் அல்-அழ்ஹா) பக்ரித் பண்டிகை, உலக அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு வருடமும் அராபிய மாதம் துல்ஹஜ் (Dhul Haj) 10ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் மக்கா நகரில் உள்ள புனித கஃபாவை நோக்கி ஃஹஜ்ஜு(Hajj) எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும். இஸ்மாயில் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் நபி அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இஸ்மாயிலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, ஜிப்ரீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிம் அவர்களுக்கு கட்டளையிட்டான். மேற்கூறிய இந்த கதையின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் குறித்த தினத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை குர்பானி கொடுத்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

திருநாள் கொண்டாட்டம்.

சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவது தியாகத் திருநாளின் முக்கிய அம்சம் ஆகும். உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இந்த நாளில் புத்தாடை அணிந்து இந்த தொழுகைகளில் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த தொழுகை திடல் போன்ற திறந்த வெளிகளிலேயே நடத்தப்படுகின்றண. தொழுகையைத் தொடர்ந்து ஒருவரையொருவர் கட்டியணைத்து மக்கள் பரஸ்பரம் தங்கள் பெருநாள் வாழ்த்துக்களை ஏனோயோர்க்குத் தெரிவிப்பர். உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல் மற்றும் விஷேட உணவுவகைகளை வீடுகளில் தயாரித்து புசித்தல் போன்றன விஷேட அம்சமாகும். பெருநாள் வாழ்த்துக்கள் யாவருக்கும் சொந்தமாகட்டும்.

உலகிலுள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய பக்ரித் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...