சிந்து சமவெளி நாகரிகம் நினைத்ததை விட இரண்டாயிரம் வருடம் பழமையானது (Indus Valley 2,000 years older than thought):

தற்போதைய இந்தியாவின் வரலாற்றின் தொன்மை நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் இதுவரை அளவிடப்பட்டிருந்த காலக்கட்டங்களை விட இரண்டாயிரம் வருடம் பழமையானது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இது எகிப்து மற்றும் பாபிலோனியாவை விடப் பழமையானது என முடிவாகிறது.

எகிப்திய நாகரிகத்திற்கு முந்தைய பழமையானது என்று அறிவிக்கப்பட்டு ஏன் உலகளவில் ஒரு சிறு அதிர்ச்சியலையைக் கூட இது ஏற்படுத்தவில்லை? இந்த அறிவிப்பு போன வருடமே நடந்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

சமீபத்திய ஆராய்ச்சி முடிவு சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கத்தை இயேசு கிறிஸ்துவிற்கு முன் ஆறாயிரம் கொண்டுசெல்கிறது. இது தற்போதைய நிலைப்பாடான இயேசு கிறிஸ்துவுக்கு முந்திய கி. மு. 3,750 ஆண்டுகள் என்பதற்கு எதிர்மாறாக உள்ளது.

1920-ல் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் ஆரம்பிக்கப்பட்ட இதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் இது எகிப்திய மற்றும் மெசபடோமியாவின் காலத்தையொட்டிய நாகரீகம் எனக் கருதப்பட்டு வந்தது.

சமீபத்தில் சண்டிகரில் இந்திய தொல்லியல் துறையால் (ASI) நடத்தப்பட்ட "ஹரப்பாவின் தொல்லியலில் உலக கருத்தரங்கம்" நிகழ்ச்சியில் இந்த கண்டறிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய இந்தோ-பாகிஸ்தான் துணைக்கண்டத்தைச் சேர்ந்த காகர்-ஹக்ரா மற்றும் பலுசிஸ்தான் போன்ற பழையப் பகுதிகளைச் சேர்ந்த தரவுகளைக் கொண்டு ஆராய்ந்ததில் இந்த நாகரிகத்தின் தொடக்கம் கி.மு. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது எனத் தெரிகிறது.

அரியானாவின் பிர்ரானா பகுதியில் எடுக்கப்பட்ட ரேடியோ-மெட்ரிக் அளவிடுகள் ஹரப்பா நாகரீகத்தை கி.மு. 7,380 முதல் கி.மு. 6,201 வரை கொண்டு செல்கின்றன. ஆய்வுகள் பாகிஸ்தானில் இரண்டு இடத்திலும் இந்தியாவில் பிர்ரானா, குனால், ராகிகரி மற்றும் பாரோர் போன்ற இடங்களில் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

அரியானாப் பகுதிகளில் உள்ள மிகப் பழைமையான ஹரப்பா நாகரிக ஆய்வுப் பகுதிகளில் நேரில் சென்று தமிழ் ஆய்வு செய்த கடலியல் ஆராய்ச்சியாளர் திரு. Orissa Balu அவர்களின் கவனத்திற்கு.

இது நாள் வரை ஆய்வுகளை காலவரிசையில் பின்னுக்கு தள்ளியது புதிய தரவுகளா, அறிவியல் தொழில்நுட்ப முறைகளா? வரலாறு முற்றிலுமாக மாற்றம் அடைந்துவிடும் நிலையில் இருக்கிறதே?

படம்: இப்படத்தில் உள்ள காளை போல் வேறெங்கும் காளை மாடுகள் இந்தியப் பகுதியில் உள்ளனவா? அல்லது தற்போது அந்தப் பகுதியில் இதே போன்ற திமில் மற்றும் திரட்சியுடன் கூடியக் காளை மாடுகள் அங்கு வசிக்கின்றனவா?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...