பேரிடர் அபாயத்தை அறிவிக்கும் அதிநவீன கருவி அறிமுகம்: குன்னூரில் 10 இடங்களில் வெள்ளோட்டம்

நீலகிரி மாவட்டத்தில், வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்புகளை அறிந்து, மொபைலுக்கு அழைக்கும் முன் எச்சரிக்கை கருவி 10
இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், தற்போது பருவமழை துவங்கியுள்ள நிலையில், நிலச்சரிவு, மண் சரிவு, வெள்ள பாதிப்பு மற்றும் சேதங்களை தவிர்க்க, மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், மண் மற்றும் நிலச்சரிவு ஏற்படக் கூடிய பகுதிகளாக 108 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, பேரிடர் ஏற்படும் நேரங்களில், அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, மாவட்டம் முழுக்க 500க்கும் மேற்பட்ட மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்பு எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் வகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக, புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி தற்போது, குன்னூர் பேரக்ஸ் பாரத் நகர், கக்காச்சி பாரத் நகர், எம்.ஜி.ஆர்., நகர், சித்தி விநாயகர் கோவில் வீதி என, 10 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை பொருத்தப்பட்ட இடங்களில், உயரமான கம்பத்தில் ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன; அறையில், மொபைல் போன், பேட்டரி "பேக் அப்', ரேடியோ, மைக் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மொபைல் போன் எண்கள், "டிரிக்கர்' முறையில், பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள உள்ள அலுவலர்களின் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட, அந்த இடத்தில் பெய்யும் மழையின் அளவு, 10 நிமிடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு, வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் குறித்து, அலுவலர்களின் மொபைலுக்கு எச்சரிக்கை விடப்படும்; அத்தகவல், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கியில் கேட்கும். மேலும், அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவியுடன், மழை நிலவரம், வெள்ள அபாயம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது ரேடியோவில் ஒலிபரப்பி, அதை, ஒலி பெருக்கி மூலம் கேட்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் பிராங்க்ளின் கூறுகையில்,""கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட இத்திட்டம் தயார் நிலையில் உள்ளது. சில நாட்களில் நடைமுறைக்கு வரும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...