1500 - பிரான்சின் பன்னிரண்டாம்
லூயி மன்னனுக்கும் அராகனின்
இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும்
தமக்கிடையே பிரிக்க
உடன்பாடு எட்டப்பட்டது.
1673 - உக்ரேனின் கோட்டின் என்ற
இடத்தில் போலந்து-
லித்துவேனியாப் படைகள்
ஓட்டோமான் இராணுவத்தைத்
தோற்கடித்தன.
1675 - குரு கோவிந்த் சிங்
சீக்கியர்களின் 10வது குருவானார்.
1675 - லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz)
என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின்
வரைபின் பரப்பைக்
காணுவதற்கு முதன் முறையாக
தொகையீட்டு நுண்கணிதத்தைப்
பாவித்தார்.
1778 - மத்திய நியூ யோர்க்கில்
செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக்
கொன்றனர்.
1831 - அடிமைப் புரட்சியில்
ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட
நாட் டர்னர் வேர்ஜீனியாவில்
தூக்கிலிடப்பட்டான்.
1865 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப்
பகுதிகளை பூட்டான்
பிரித்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனிக்குக் கொடுத்தது.
1880 - ஆஸ்திரேலியாவின் Bushranger
நெட் கெல்லி மெல்பேர்னில்
தூக்கிலிடப்பட்டான்.
1887 - ஐக்கிய அமெரிக்காவின்
சிக்காகோ நகரில் தொழிலாளர்
தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட்
பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ்
ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 - வாஷிங்டன் ஐக்கிய
அமெரிக்காவின் 42வது மாநிலமாகச்
இணைக்கப்பட்டது.
1909 - ஹவாயில் பேர்ல்
துறைமுகத்தில் அமெரிக்கக்
கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 - பிரான்சில் "கொம்பியேன்
காடு" என்ற இடத்தில் ரயில்
பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும்
கூட்டுப் படைகளுக்கும் இடையில்
போர்நிறுத்த ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. முதலாம்
உலகப் போர் 11:00
மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918 - ஜோசப் பித்சூத்ஸ்கி
வார்சாவுக்குத் திரும்பி போலந்தின்
உயர் இராணுவப் பதவியைப்
பெற்றான்.
போலந்து விடுதலை பெற்றது.
1919 - இலங்கைத் தேசிய காங்கிரஸ்
அமைக்கப்பட்டது.
1930 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,
லியோ சிலார்ட் ஆகியோர்
தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன்
குளிர்சாதனப்பெட்டிக்கான
காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 - யாழ் பொது நூல் நிலையம்
அமைக்கப்பட்டது.
1940 - ஐக்கிய அமெரிக்காவின்
மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத
சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் : நாசி
ஜேர்மனி பிரான்ஸ் மீதான
தனது முற்றுகையை முடித்தது.
1960 - தெற்கு வியட்நாம் அதிபர்
நியோ டின் டியெம் மீதான
இராணுவப் புரட்சி தோல்வியில்
முடிந்தது.
1965 - ரொடீசியாவில் இயன் ஸ்மித்
தலைமையிலான வெள்ளை இன
சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
1966 - நாசா ஜெமினி 12
விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1968 - மாலைதீவுகளில்
இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975 - ஆஸ்திரேலியப் பிரதமர் கஃப்
விட்லம் தலைமையிலான
அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
1992 - இங்கிலாந்து திருச்சபை
பெண்களையும் சமயகுருக்களாக
சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2004 - யாசர் அரபாத்
இறந்து விட்டதாக பாலஸ்தீன
விடுதலை இயக்கம் அறிவித்தது.
மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.
பிறப்புக்கள்
1898 - கி. ஆ. பெ. விசுவநாதம் ,
தமிழறிஞர் (இ. 1994 )
1821 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய
எழுத்தாளர் (இ. 1881 )
1937 - ப. ஆப்டீன் , ஈழத்து எழுத்தாளர்
1945 - டானியல் ஒர்ட்டேகா ,
நிக்கராகுவாவின் குடியரசுத்
தலைவர்
1974 - லியோனார்டோ டிகாப்ரியோ
, அமெரிக்கத் திரைப்பட நடிகர்
இறப்புகள்
1993 - கப்டன் மயூரன், தமிழீழ
விடுதலைப் புலிப் போராளி (பி.
1970 )
1993 - கப்டன் ஈழமாறன் , தமிழீழ
விடுதலைப் புலிப் போராளி (பி.
1973 )
2004 - யாசர் அரபாத் , பாலஸ்தீன
விடுதலை இயக்கத் தலைவர், நோபல்
பரிசாளர் (பி. 1929 )
2005 - பீட்டர் டிரக்கர் , ஆஸ்திரிய
மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909 )
சிறப்பு நாள்
பொதுநலவாய நாடுகள் -
நினைவுறுத்தும் நாள்
போலந்து - விடுதலை நாள் (1918 )
அங்கோலா - விடுதலை நாள் ( 1975 )
