நவம்பர் 12 வரலாறு நிகழ்வுகள்

764 - திபெத்தியப் படைகள் சீனாவின்
டாங் மக்களின் தலைநகரான சங்கான்
நகரை 15 நாட்கள்

கைப்பற்றி வைத்திருந்தன.
1833 - அலபாமாவில் லியோனீட்
விண்கற்கள் வீழ்ந்தன.
1893 - அன்றைய பிரித்தானிய
இந்தியாவுக்கும் (தற்போதைய
பாகிஸ்தான் ) ஆப்கானிஸ்தானுக்கும்
இடையேயான எல்லைக்கோடு
வரையறுக்க
உடன்பாடு எட்டப்பட்டது.
1905 - நோர்வே மக்கள்
வாக்கெடுப்பு மூலம்
குடியாட்சியை விட
மன்னராட்சியே சிறந்தது எனத்
தெரிவித்தனர்.
1906 - பாரிசில்
அல்பேர்ட்டோ சாண்டோஸ்-
டியூமொண்ட் விமானம் ஒன்றைப்
பறக்கவிட்டார்.
1918 - ஆஸ்திரியா
குடியரசாகியது.
1927 - மகாத்மா காந்தி
இலங்கைக்கான தனது முதலாவதும்
கடைசியுமான
பயணத்தை மேற்கொண்டார்.
1927 - லியோன் ட்ரொட்ஸ்கி
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில்
இருந்து நீக்கப்பட்டார். ஜோசப்
ஸ்டாலின் சோவியத்தின்
முழு அதிகாரத்தையும்
கைப்பற்றினார்.
1938 - மடகஸ்காரை யூதர்களின்
தாயகமாக மாற்றும் நாசி
ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன்
கோரிங்" என்பவர் வெளிக்
கொணர்ந்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர்:
செவஸ்தபோல் நகரில் சோவியத்
போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா"
மூழ்கடிக்கப்பட்டது.
1944 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியாவின் அவ்ரோ போர்
விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல்
ஒன்றை நார்வேயில் மூழ்கடித்தது.
1948 - டோக்கியோவில்
பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின்
நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய
இராணுவ அதிகாரிகளுக்கு 2ம்
உலகப் போரில் இழைத்த
குற்றங்களுக்காக மரண
தண்டனை விதித்தது.
1969 - மை லாய் படுகொலைகள்
தொடர்பான
உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர்
ஹேர்ஷ் வெளியிட்டார்.
1980 - நாசாவின் விண்கலம்
வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக
அருகில் சென்று அதன்
வளையங்களின்
படங்களை பூமிக்கு அனுப்பியது.
1981 - கொலம்பியா விண்ணோடம்
தனது இரண்டாவது விண்வெளிப்
பயணத்தை இரண்டு வீரர்களுடன்
ஆரம்பித்தது.
1982 - சோவியத் கம்யூனிஸ்ட்
கட்சியின் பொதுச் செயலாளரராக
யூரி அந்திரோப்பொவ்
தேர்வு செய்யப்பட்டார்.
1982 - போலந்தின் சொலிடாரிட்டி
தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா
பதினொரு மாத
சிறைத்தண்டனைக்குப்
பின்பு விடுதலையானார்.
1989 - தென்னிலங்கையின்
உலப்பனையில் தனது தோட்ட வீட்டில்
மறைந்திருந்த மக்கள்
விடுதலை முன்னணியின் தலைவர்
ரோகண விஜேவீர கைதாகி மறுநாள்
கொல்லப்பட்டார்.
1990 - இணைய வலை பற்றிய
தனது முதலாவது திட்டத்தை ரிம்
பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
1991 - கிழக்குத் திமோர், டிலியில்
இடம்பெற்ற மாணவர் போராட்டம்
இந்தோனீசிய இராணுவத்தினரால்
முறியடிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்கள்
உயிரிழந்தனர்.
1994 - இலங்கையின் 5வது அரசுத்
தலைவராக சந்திரிகா பண்டாரநாயக
குமாரதுங்க
தேர்வு செய்யப்பட்டார்.
1996 - சவுதி அரேபியாவின்
போயிங் விமானமும் கசக்ஸ்தானின்
இல்யூஷின் விமானமும்
புது டில்லிக்கு அருகில்
நடுவானில் மோதிக் கொண்டதில் 349
பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல்
கோர் கையெழுத்திட்டார்.
2001 - நியூயோர்க் நகரில்
டொமினிக்கன் குடியரசு நோக்கிச்
சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட
சில வினாடிகளில்
விபத்துக்குள்ளாகியதில்
விமானத்தில் சென்ற 260 பேரும்
தரையில் இருந்த 5 பேரும்
கொல்லப்பட்டனர்.
2001 - ஆப்கானிஸ்தானின் காபூல்
நகரை விட்டு தலிபான் படைகள்
முற்றாக விலகினர்.
2006 - முன்னாள் சோவியத்
குடியரசான தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம்
இருந்து பிரிந்து செல்ல
வாக்கெடுப்பை நடத்தியது.

பிறப்புக்கள்
1817 - பஹாவுல்லா , பஹாய்
சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892 )
1866 - சுன் இ சியன், சீனாவின்
புரட்சித் தலைவர் (இ. 1925 )
1896 - சலீம் அலி , இந்திய பறவையியல்
வல்லுநர் (இ. 1987)
1920 - வல்லிக்கண்ணன் , தமிழ்
எழுத்தாளர் (இ. 2006 )

இறப்புகள்
2001 - சத்குரு சிவாய
சுப்ரமணியசுவாமி , இந்து
அமெரிக்க ஆன்மிகவாதி (பி. 1927)

சிறப்பு நாள்
பஹாய் நம்பிக்கை - புனித நாள்
( பஹாவுல்லா பிறந்த நாள்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...