நவம்பர் 13 வரலாறு நிகழ்வுகள்

1002 - இங்கிலாந்தில் வசிக்கும்
அனைத்து டேன் பழங்குடிகளையும்
கொல்லும்படி ஆங்கிலேய
மன்னன்
எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென்
பிறைஸ் நாள் படுகொலைகள் என
அழைக்கப்பட்டது).
1795 - கேப்டன் புவுசர் என்பவனின்
தலைமையில் பிரித்தானியப்
படையினர் இலங்கையின்
கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம்
இருந்து கைப்பற்றினர்.
1851 - வாஷிங்டனின் சியாட்டில்
நகரில் முதல் ஐரோப்பியக்
குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ.
டென்னி என்பவரும்
அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
1887 - மத்திய லண்டன் பகுதியில்
அயர்லாந்து விடுதலைப் போராட்ட
ஆதரவாளர்களுக்கும்
காவற்துறையினருக்கும் இடையில்
மோதல் வெடித்தது.
1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில்
தூக்கிலிடப்பட்ட
நான்கு தொழிலாளர் தலைவர்களின்
இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர்
கலந்து கொண்டனர்.
1918 - ஒட்டோமான் பேரரசின்
தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல்
நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
1950 - வெனிசுவேலாவின் அதிபர்
ஜெனரல் கார்லொஸ்
டெல்காடோ சால்போட்
படுகொலை செய்யப்பட்டார்.
1957 - கோர்டன் கூல்ட் என்பவரால்
லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
1965 - அமெரிக்காவின் யார்மூத்
காசில் என்ற பயணிகள் கப்பல் பஹாமசில்
மூழ்கியதில் 90 பேர்
கொல்லப்பட்டானர்.
1970 - போலா சூறாவளி: கிழக்குப்
பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப்
பெரும் சூறாவளியில் 500,000 பேர்
வரையில் உயிரிழந்தனர். இது 20ம்
நூற்றாண்டின் மிகப் பெரும்
இயற்கை அழிவு எனக்
கருதப்படுகிறது.
1971 - ஐக்கிய அமெரிக்காவின்
மரைனர் 9 விண்கலம் செவ்வாய்க்
கோளை சுற்றி வந்தது. இதுவே
பூமியை விட வேறொரு கோளைச்
சுற்றிவந்த
முதலாவது விண்கலமாகும்.
1985 - கொலம்பியாவில்
நெவாடோ டெல் ரூஸ் என்ற
எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட
மண்சரிவினால் ஆர்மேரோ நகரம்
அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.
1989 - இலங்கையின் மக்கள்
விடுதலை முன்னணியின் தலைவர்
ரோகண விஜேவீர இராணுவத்தினரால்
முதல் நாள் கைது செய்யப்பட்டுச்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
1990 - உலக வலைப் பின்னல் ( WWW)
ஆரம்பிக்கப்பட்டது.
1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ்
தேவாலயத்தின் மீது இலங்கை
விமானங்கள் நடத்திய
குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில்
ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள்
கொல்லப்பட்டனர். பலர்
படுகாயமடைந்தனர்.
1993 - தவளை நடவடிக்கை:
யாழ்ப்பாணம் , பூநகரி மற்றும்
நாகதேவன்துறை இராணுவ,
கடற்படைக் கூட்டுத்தளங்களை
விடுதலைப் புலிகள்
தாக்கி அழித்து பல தாங்கிகளையும்
விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற
இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில்
இணைய சுவீடன் மக்கள்
முடிவு செய்தனர்.
1995 - சவுதி அரேபியாவில் ரியாத்
நகரில் இடம்பெற்ற
குண்டுத்தாக்குதலில் ஐந்து
அமெரிக்கர்களும் இரண்டு
இந்தியர்களும் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்
354 - ஹிப்போவின் அகஸ்டீன்,
மெய்யியலாளர், இறையியலாளர் (இ.
430)
1934 - கமால் கமலேஸ்வரன்,
மேற்கத்திய இசைக் கலைஞர்
1935 - பி. சுசீலா , தென்னிந்தியத்
திரைப்படப் பின்னணிப் பாடகி.
1969 - அயான் கேர்சி அலி ,
சோமாலியப் பெண்ணியவாதி
1979 - ரான் ஆர்டெஸ்ட் , அமெரிக்க
கூடைப்பந்து ஆட்டக்காரர்.

இறப்புகள்
1989 - ரோகண விஜேவீர ,
இலங்கையின் மக்கள்
விடுதலை முன்னணியின் தலைவர்
(பி. 1943)
2002 - கணபதி கணேசன், மலேசிய
இதழாசிரியர் (பி. 1955 )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...