“மூ” கண்டமும் “குமரிக்கண்டமும்” ஒன்றா? – Lemuria லெமூரியா பாகம் 01

“லெமூரியா” என கூகிலில் தேட
ஆரம்பித்ததுமே லெமூரியாவின்
இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான
முரண்பாடுமிக்க தகவல்கள் வர

ஆரம்பிக்கின்றன. அதாவது “மூ (mu)”
எனும் பெயருடன் பசுபிக்
சமுத்திரத்தில் காணப்பட்ட
கண்டமே லெமூரியா என
பொருள்படும் வகையில் தகவல்கள்
காணப்படுகின்றன. அதே வேளை சில
படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த
கண்டம்தான் “லெமூரியா” என
கூறுகின்றன. 

உலக வரைபடத்தில் காணப்படும்
வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள்
ஆப்பிரிக்க ஐரொப்பிய
கண்டங்களுடன் இனைக்க கூடிய
வாறு காணப்படுகின்றன.
(கற்பனை செய்து பாருங்கள், தென்
அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள
கூர்ப்பகுதி ஆபிரிக்காவின்
இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன்
பொருந்தக்கூடியதாக இருக்கும்.
அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க
முனைப்பகுதி வட தென் அமெரிக்க
கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன்
பொருந்தக்கூடியதாக இருக்கும்.)
ஆகவே, இவ்
இடைப்பட்ட பகுதியில் கண்டம்
இருந்திருக்க சாத்தியமில்லை.
( ஆஸ்திரேலிய கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன்
பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக
இல்லை)
இன்னொரு காரணமாக, பூமியுடன்
ஒரு பெரிய விண்கல் மோதிய
போது பசுபிக் சமுத்திரத்தில்
இருந்து பிளவுபட்டு போன
ஒரு பகுதியே காலப்போக்கில்
ஈர்ப்பு விசையின் காரணமாக
சந்திரனாக உரு மாறியதாக
விஞ்ஞானிகள் மத்தியில்
ஒரு கருத்து நிலவிவருகிறது.

சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில
கனிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும்
உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம்
தோன்ற முன்னர் ஏற்பட்டதாக
கருதப்படுகிறது. இன்னொரு சாரார்
இவ் மோதலே டைனோசரின்
அழிவுக்கு காரணமாக இருக்கலாம்
எனவும் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும் மனித சமுதாயம்
அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.)
மற்றைய
ஆச்சரிய தகவல்களை பாகம் 2 ல்
பார்க்கலாம்….

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...