நவம்பர் 24 வரலாறு நிகழ்வுகள்

1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ்
என்பவர் முதன் முதலாக வெள்ளிக்
கோள் சூரியனுக்கும் பூமிக்கும்
இடையில் செல்வதை
கண்டுபிடித்தார்.
1642 - ஏபல் டாஸ்மான் வான் டீமனின்
நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார்.
இது பின்னர் தாஸ்மானியா எனப்
பெயர் பெற்றது.
1859 - சார்லஸ் டார்வின் உயிரங்களின்
தோற்றம் நூலை வெளியிட்டார்.
இதன் பிரதிகள் அனைத்தும் முதல்
நாளிலேயே முழுவதுமாக
விற்பனையாகின.
1914 - முசோலினி இத்தாலிய
சோசலிசக் கட்சியில்
இருந்து விலக்கப்பட்டார்.
1917 - விஸ்கொன்சின் மாநிலத்
தலைநகர் மில்வாக்கியில்
காவல்துறை தலைமையகத்தில்
இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10
பேர் கொல்லப்பட்டனர்.
1922 -
துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக
வைத்திருந்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்டு ஐரியக்
குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த
எழுத்தாளர் ரொபேர்ட் ஏர்ஸ்கின்
சைல்டேர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1926 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ
அரவிந்தர் ஆசிரமத்தின்
பொறுப்பை அன்னையிடம்
ஒப்படைத்து விட்டு அரவிந்தர்
இளைப்பாறினார்.
1940 - இரண்டாம் உலகப் போர்:
சிலோவாக்கியா
அச்சு அணி நாடுகள் அமைப்பில்
இணைந்தது.
1943 - இரண்டாம் உலகப் போர் : ஐக்கிய
அமெரிக்கக் கடற்படைக் கப்பல்
டராவா என்ற இடத்தில்
மூழ்கடிக்கப்பட்டதில் 650 பேர்
கொல்லப்பட்டனர்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
டோக்கியோ நகர்
மீது முதற்தடவையாக அமெரிக்க
விமானங்கள் குண்டுகளைப் போட்டன.
1965 - ஜோசப் மொபுட்டு
கொங்கோவின் குடியரசுத் தலைவர்
பதவியை இரத்தம் சிந்தாப்
புரட்சி மூலம் கைப்பற்றினார். இவர்
1971 இல் கொங்கோவின் பெயரை சாயீர்
என மாற்றினார். 30 ஆண்டுகளின் பின்
1997 இல் இவர் பதவியில்
இருந்து அகற்றப்பட்டார்.
1966 - சிலோவாக்கியாவில்
பல்கேரிய விமானம் ஒன்று வீழ்ந்ததில்
82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 - சந்திரனுக்குச் சென்ற
அப்பல்லோ 12 விண்கலம் 3
விண்வெளி வீரர்களுடன் பசிபிக்
கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1971 - வாஷிங்டனில் பெரும்
சூறாவளி நாளன்று கடத்தப்பட்ட
விமானம் ஒன்றிலிருந்து டான்
கூப்பர் என்பவன் 200,000 அமெரிக்க
டாலர்களுடன் பாராசூட்டில்
கீழே குதித்தான்.
இவனோ பணமோ இதுவரையில்
கண்டுபிடிக்கப்படவில்லை.
1992 - மக்கள் சீனக் குடியரசில் சீன
விமானம் ஒன்று வீழ்ந்ததில் 141 பேர்
கொல்லப்பட்டனர்.
1992 - யாழ்ப்பாணம், பலாலி
வான்படைத் தளத்தின் கிழக்குப்
பகுதி இராணுவ வேலி
விடுதலைப் புலிகளால்
தகர்க்கப்பட்டது.
2002 - ரவி வர்மாவின் யசோதையும்
கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56
லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
2006 - சிங்கள நாளிதழான
`மௌபிம' பத்திரிகையின் தமிழ்ப்
பத்திரிகையாளரான
முனுசாமி பரமேஸ்வரி, பயங்கரவாத
இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற
குற்றச்சாட்டின் பேரில்
கைது செய்யப்பட்டார்.

பிறப்புக்கள்
1938 - ஆஸ்கர் ராபர்ட்சன் , அமெரிக்கக்
கூடைப்பந்தாட்டக்காரர்
1961 - அருந்ததி ராய் , இந்தியப் பெண்
எழுத்தாளர்

இறப்புகள்
2012 வி. என். சிதம்பரம் திரைப்பட
தயாரிப்பாளர், கமலா திரையரங்க
உரிமையாளர்.

சிறப்பு நாள்
கொங்கோ மக்களாட்சிக் குடியரசு -
தேசிய நாள்
படிவளர்ச்சி நாள

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...