நவம்பர் 3 வரலாறு!!!

நிகழ்வுகள்
644 - இரண்டாவது முஸ்லிம் கலீபா
உமறு இப்னு அல்-கத்தாப்
மதினாவில்
பாரசீக அடிமையினால்
கொல்லப்பட்டார்.
1493 - கரிபியன் கடலில்
டொமினிக்காத் தீவை முதன்
முதலில் கொலம்பஸ் கண்டார்.
1655 - பிரான்சும் இங்கிலாந்தும்
இராணுவப் பொருளாதார
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1793 - பிரான்சின் நாடகாசிரியரும் ,
செய்தியாளரும் ,
பெண்ணியவாதியுமான
ஒலிம்பியா டி கஸ்
தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1812 - நெப்போலியனின்
இராணுவத்தினர் வியாஸ்மா என்ற
இடத்தில் இடம்பெற்ற போரில்
தோற்றனர்.
1838 - பாம்பே டைம்ஸ் முதன்
முதலில் வெளியிடப்பட்டது.
இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப்
இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
1903 - ஐக்கிய அமெரிக்காவின்
தூண்டுதலை அடுத்து பனாமா
கொலம்பியாவிடம்
இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
1905 - ரஷ்யாவின் இரண்டாம்
நிக்கலாஸ் அரசியல்
கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க
உத்தரவிட்டான்.
1913 - ஐக்கிய அமெரிக்கா வருமான
வரியை அறிமுகப்படுத்தியது.
1918 - போலந்து ரஷ்யாவிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென்
துறைமுகத்தை அமெரிக்காவின்
சுமார் 500 போர் விமானங்கள்
தாக்கி அழித்தன.
1957 - உலகில் முதன் முதலில்
மிருகம் ஒன்றை (லைக்கா என்னும்
நாயை) சோவியத் ஒன்றியம்
ஸ்புட்னிக் 2 விண்கலத்தில்
விண்வெளிக்கு அனுப்பியது.
1963 - தி.மு.க.
செயற்குழு திராவிட நாடு,
தனிநாடு கோஷத்தைக்
கைவிடுவதாக அறிவித்தது.
1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற
இந்திய தேசிய காங்கிரசின்
மாநாட்டில் காமராசர் அதன்
தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன்
முறையாக அமெரிக்க அதிபர்
தேர்தலில் வாக்களிக்க
அனுமதிக்கப்பட்டார்கள்.
1970 - சல்வடோர் அலெண்டே
சிலியின் அதிபரானார்.
1973 - நாசா மரைனர் 10 என்ற
விண்கப்பலை புதன்
நோக்கி அனுப்பியது. 1974 , மார்ச் 29
இல் அக்கோளை அடைந்த
முதலாவது விண்கலம் இதுவாகும்.
1978 - டொமினிக்கா ஐக்கிய
இராச்சியத்திடம்
இருந்து விடுதலை பெற்றது.
1979 - கம்யூனிச பாட்டாளிகள்
கட்சியில் 5 உறுப்பினர்கள்
வெள்ளையின
மேலாதிக்கவாதிகளால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1982 - ஆப்கானிஸ்தானில் சலாங்
சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000
பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1986 -
மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்
ஐக்கிய அமெரிக்காவிடம்
இருந்து விடுதலை பெற்றது.
1988 - இலங்கையின் தமிழ்க்
குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக்
கழகத்தினரால் மாலை தீவுகள்
அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி
இந்திய இராணுவத்தினரால் 24
மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

பிறப்புக்கள்
1618 - ஔரங்கசீப் , இந்தியாவின்
மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707 ).
1795 - ஜேம்ஸ் போக் , ஐக்கிய
அமெரிக்காவின் 11
ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1849 )
1911 - ஏ. கே. செட்டியார் , தமிழில்
பயண இலக்கியத்தின் முன்னோடி (இ.
1983 )
1933 - அமர்த்தியா சென், இந்தியப்
பொருளாதார நிபுணர், நோபல்
பரிசு பெற்றவர்
1932 - அன்னை பூபதி, மட்டக்களப்பில்
இந்திய அமைதிப்படைக்கு எதிராக
சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர்
(இ. 1988 )

இறப்புகள்
2006 - ஈ. வி. சரோஜா , தமிழ்த்
திரைப்பட நடிகை, (பி. 1935).

சிறப்பு நாள்
பனாமா - விடுதலை நாள் ( 1903)
டொமினிக்கா - விடுதலை நாள்
( 1978)
மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்
- விடுதலை நாள் ( 1986 )

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...