புராதன உலகத்தின் முக்கிய
மர்மங்களுள ஒன்றாக விளங்கும்
நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில்
உள்ள நாஸ்கா சமவெளியில்
காணப்படுகின்றன. இந்தக்கோடுகள்
முதன்முதலில் உலகுக்குத்தெரிய
வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ்
சேவைகள் பெரு சமவெளியின்
மீது பறக்கத்தொடங்கிய 1920ம்
ஆண்டில்தான். இந்தக்கோடுகள்
கி.பி.400 லிருந்து 600ம்
ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய்
கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில்
இதுபோல இங்கொன்றும்
அங்கொன்றுமாய் சில வரைபடங்கள்
காணப்பட்டாலும் முன்னூறுக்கும்
அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய
அளவில் வரையப்பட்ட காரணம்தான்
நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு
அடிப்படையாகும். வானத்தில்
இருந்து பார்த்தால்
மட்டுமே புலப்படக்கூடிய
அளவுக்கு சில வரைபடங்கள்
1000அடி நீளத்திற்கும் மேல்
வரையப்பட்டிருப்பது அறிவியல்
கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில்
என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.
இதே காரணம்தான் இதைப்பற்றிய பல
மர்மகதைகளுக்கும்
வித்தாகிப்போனது. பலர்
இதை வேற்று கிரகவாசிகளின்
விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர்.
அதற்கு காரணம் இதன் ஒருசில
வரைபடங்கள் மாடர்ன்
விமானநிலையத்தின் பார்க்கிங்
அமைப்பை ஒத்திருப்பதாய்
அமைந்திருப்பதேயாகும்.
ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள்
தண்ணீருக்காக கடவுளிடம்
வழிபாட்டு நடத்துவதற்காக
உருவாக்கிக்கொண்ட வரைபடம்
என்கிறார்கள். ஒருசிலர்
இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக
வாதிக்கின்றனர்.
ஒரு சில ஆராய்ச்சியாளர்கள்
இதை வானவெளி பற்றிய காலண்டர்
என்று வாதிக்கின்றனர்.
எது எப்படியிருந்தாலும் வெறும்
மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும்
இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல
கடந்தும் அழியாமல், முழுக்காரணமும்,
வரையப்பட்ட விதமும் தெரியாமல்
வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!
மர்மங்களுள ஒன்றாக விளங்கும்
நாஸ்கா கோடுகள் தெற்கு பெருவில்
உள்ள நாஸ்கா சமவெளியில்
காணப்படுகின்றன. இந்தக்கோடுகள்
முதன்முதலில் உலகுக்குத்தெரிய
வந்தது கமெர்ஷியல் ஏர்லைன்ஸ்
சேவைகள் பெரு சமவெளியின்
மீது பறக்கத்தொடங்கிய 1920ம்
ஆண்டில்தான். இந்தக்கோடுகள்
கி.பி.400 லிருந்து 600ம்
ஆண்டுக்கு மத்தியில் வரையப்பட்டதாய்
கணக்கிடப்பட்டிருக்கிறது. உலகில்
இதுபோல இங்கொன்றும்
அங்கொன்றுமாய் சில வரைபடங்கள்
காணப்பட்டாலும் முன்னூறுக்கும்
அதிகமாய் ஒரேயிடத்தில் மிகப்பெரிய
அளவில் வரையப்பட்ட காரணம்தான்
நாஸ்காவின் முக்கியத்துவத்துக்கு
அடிப்படையாகும். வானத்தில்
இருந்து பார்த்தால்
மட்டுமே புலப்படக்கூடிய
அளவுக்கு சில வரைபடங்கள்
1000அடி நீளத்திற்கும் மேல்
வரையப்பட்டிருப்பது அறிவியல்
கண்டுபிடிப்புகளற்ற 400ம் வருடத்தில்
என்பதுதான் நம்ப முடியாத ஆச்சரியம்.
இதே காரணம்தான் இதைப்பற்றிய பல
மர்மகதைகளுக்கும்
வித்தாகிப்போனது. பலர்
இதை வேற்று கிரகவாசிகளின்
விமானத்தளம் என்றே வாதிக்கின்றனர்.
அதற்கு காரணம் இதன் ஒருசில
வரைபடங்கள் மாடர்ன்
விமானநிலையத்தின் பார்க்கிங்
அமைப்பை ஒத்திருப்பதாய்
அமைந்திருப்பதேயாகும்.
ஒரு சிலர் இதை நாஸ்கா மக்கள்
தண்ணீருக்காக கடவுளிடம்
வழிபாட்டு நடத்துவதற்காக
உருவாக்கிக்கொண்ட வரைபடம்
என்கிறார்கள். ஒருசிலர்
இதை ஈமச்சடங்குகளுக்கான ஏரியாவாக
வாதிக்கின்றனர்.
ஒரு சில ஆராய்ச்சியாளர்கள்
இதை வானவெளி பற்றிய காலண்டர்
என்று வாதிக்கின்றனர்.
எது எப்படியிருந்தாலும் வெறும்
மணல்வெளியில் வரையப்பட்டிருக்கும்
இந்த கோடு வரைபடங்கள் காலங்கள் பல
கடந்தும் அழியாமல், முழுக்காரணமும்,
வரையப்பட்ட விதமும் தெரியாமல்
வீற்றிருப்பது நிச்சயமாய் மர்மமே!
