மக்கள் தான் எஜமானர்கள் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்' : கோர்ட் அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு


தகுதியான வழக்குகளில் தான், சட்டரீதியான போராட்டத்தை, அரசு நடத்த வேண்டும். மக்களுக்கு எதிராக, அரசு செயல்படக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை, துறைமுகப் பொறுப்பு கழகத்தில், 'பியூன்' ஆக பணியாற்றியவர், 2000ல், மரணமடைந்தார்.

கருணை வேலை கேட்டு, அவரது மனைவி, ஜெயசித்ரா என்பவர், விண்ணப்பித்தார்.
இவரது மனுவை பரிசீலிக்காமல், வேறு இருவரை, பணியில் நியமித்தனர். பின், "மூன்று ஆண்டுகளுக்கு மேல், விண்ணப்பத்தை நிலுவையில் வைத்திருக்க முடியவில்லை' எனக்கூறி, துறைமுக நிர்வாகம், நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயசித்ரா, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி சசிதரன், இரண்டு மாதங்களில், ஜெயசித்ராவை பணியில் நியமிக்கும்படி, துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். கடந்த ஆண்டு, நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, துறைமுக நிர்வாகம் தாக்கல் செய்த, அப்பீல் மனுவை, கடந்த, செப்டம்பர் மாதம், 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளுபடி செய்தது. அதன்பின்னும், உத்தரவு நிறைவேற்றப்படாததால், துறைமுகப் பொறுப்பு கழகத்தின் தலைவர், அதுல்ய மிஸ்ரா, செயலர், அரிசந்திரன் ஆகியோருக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு மனுவை, ஜெயசித்ரா தாக்கல் செய்தார். இம்மனு, கடந்த, அக்டோபரில், விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் செய்யப் போவதாக, தெரிவிக்கப்பட்டது. அதற்கு, "அக்டோபருக்குள், கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், கோர்ட்டில் ஆஜராகும்படி, துறைமுகத் தலைவருக்கு, உத்தரவிட வேண்டியது வரும்' என, நீதிபதி சசிதரன் கூறினார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், துறைமுகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட, அப்பீல் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கோர்ட் அவமதிப்பு மனு, நீதிபதி சசிதரன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயசித்ராவுக்கு, பணி நியமனம் வழங்கியதற்கான உத்தரவு, வழக்கு செலவுத் தொகையாக, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயசித்ரா, பணியில் சேர்ந்ததும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: தகுதியான வழக்குகளில் மட்டுமே, சட்ட ரீதியான போராட்டத்தை, அரசு நடத்த வேண்டும். அரசு அதிகாரிகள், பொது மக்களை இழுத்தடிக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள் என்பதை, அரசு அதிகாரிகள் உணர வேண்டும். மக்களால், மக்களுக்காக தான், அரசு இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக, அரசு இருக்கக் கூடாது. கீழமை கோர்ட்கள், உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் எல்லா உத்தரவுகளையும் எதிர்த்து, அவை, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கு தகுதியானவை தானா என்பதை எல்லாம் ஆராயாமல், பொதுமக்களின் பணத்தை செலவழிக்கின்றனர். இத்தகைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது.
நீதிமன்ற உத்தரவால், மனுதாரருக்கு பணி கிடைத்துள்ளதால், அந்த அளவு திருப்தியுடன், இந்த கோர்ட் அவமதிப்பு மனுவை, முடித்துக் கொள்கிறேன். இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...