சட்ட விரோதமாக அச்சிட முடியாதவாறு பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன்
இ-பார் கோடு முறையில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு கடந்த ஆண்டில் இரண்டு முறையும், இந்த ஆண்டு ஒரு முறையும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுப்பள்ளிகளிலேயே பணி கிடைத்து விட்டதால் சான்றிதழ் தேவை முக்கியத்துவம் பெறவில்லை. தற்போது நடந்த தேர்வில் மொத்தம் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசுப்பள்ளிகளில் பணி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எஞ்சியுள்ளவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான தயாரிப்பு பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இச்சான்றிதழ் முழுவதும் தமிழிலேயே இருக்கும் எனவும், இ-பார் கோடு முறையில் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்ப பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் என பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் சட்ட விரோதமாக வேறு யாரும் அச்சிட முடியாதவாறு தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. Ôஇந்த சான்றிதழ்கள் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதலாம்Õ என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.