பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு கல்வி சான்றிதழ்

கோவை மத்திய சிறையில், பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகள், கல்விச் சான்றிதழ் வழங்கி, பாராட்டப்பட்டனர். கோவை மத்திய சிறையில், 2012 - 13ம் கல்வியாண்டில் நடந்த பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகளுக்கு,
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, சிறை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கோவை சரக சிறைத் துறை டி.ஜ.ஜி., கோவிந்தராஜன் தலைமை வகித்தார். எட்டாம் வகுப்பில், 17 கைதிகள், 10ம் வகுப்பில், 13 கைதிகள், பிளஸ் 2வில், ஏழு கைதிகள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு, சான்றிதழ்களும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கைதிகளுக்கு கழற்கேடயமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சிறையிலுள்ள தொழிற்கூட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய, 30க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கப் பட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...