கோவையில் பகல் நேரத்தில், விட்டு விட்டு எட்டு மணி நேரத்துக்கு ஏற்படும் மின் வெட்டால் கோவை மாவட்டத்தில் அரசுப்
பணிகள் சுணக்கமடைந்துள்ளன. இம்மாத இறுதியில் அரசுப்பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய மாதச்சம்பளம் சரியான நேரத்துக்கு கிடைக்குமா என்பது
கேள்விக்குறியாகியுள்ளது.
கோவை நகரில் 58 அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் முதல் சாதாரண அரசுப்பணியாளர் வரை அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாவட்ட கருவூலம், இது தவிர கோவை மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம், ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளில் வழங்கப்படுகிறது.
இது தவிர, அரசுக்கு செலுத்தப்
படவேண்டிய பல்வேறு கட்டணங்கள், கருவூலத்தின் வாயிலாக பெறப்படுகின்றன. மாவட்டக் கருவூலக கட்டுப்பாட்டில், தெற்கு தாலுகா அலுவலகத்திலும், காந்தி
புரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகிய பகுதிகளிலும் சார்நிலைக்கருவூலங்கள் (சப்டிரஷரி) செயல்படுகின்றன. இங்கு பெறப்படும் அரசுக்கு சேரவேண்டிய கட்டணங்கள் அனைத்தும், மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்
படும்; அல்லது அந்தந்த பகுதியிலுள்ள ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா கருவூலக்கிளையில் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்படும்.
அரசின் அனைத்துத்துறையிலும் மின்மயம், தொழில்நுட்பமயம், நவீனமயம், கணினி பயன்பாடு என்று தமிழக அரசு அசத்தி வருகிறது. ஆனால், அதற்கு தேவையான மின்சார உற்பத்தியில் மட்டும் தொடர்ந்து பின்தங்கியே இருக்கிறது. இதனால், கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
கோவை மாவட்டக்கருவூலத்தில், தொடர்ந்து இரண்டு மணி நேரம் மட்டுமே தாக்குப்பிடிக்கும் யு.பி.எஸ்., கருவி பயன்படுத்தப்படுகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தேவையான மின்சாரம் யு.பி.எஸ்.,( தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யும் கருவி) வாயிலாக கம்ப்யூட்டர்களுக்கு செல்கிறது.
கருவூலப்பணி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை. ஆனால், அதற்குள் ஆறு முறை மின்வெட்டு ஏற்பட்டு ஒரு மணிநேர இடைவெளியில் மின்சாரம் வருகிறது. மின்சாரம் விட்டு விட்டு வருவதால், யு.பி.எஸ்.,சில் தொடர்ந்து மின்சாரம் இருப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், கருவூலத்திலுள்ள அனைத்து கம்ப்யூட்டர்களும் தொடர்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களை மட்டும் "ஆன்' செய்து பணிகளை செய்கின்றனர். அரசுப்பணியாளர்களுக்கான சம்பள பட்டியலை சம்பந்தப்பட்ட வங்கிகளில் உரிய நேரத்தில் செலுத்தினால் மட்டுமே, மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் அவரவர் வங்கி சேமிப்புக்கணக்குக்கு போய் சேரும். இம்மாதம் தொடர் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட குளறுபடியால் கருவூலப்பணியாளர்கள் திணறிப்போயினர்.