காலாவதி ஆகி விட்ட ஐரோப்பிய
செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத
பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக
வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றை கடலில் விழ வைக்கும்
முயற்சியில் விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானிகள்
அச்சத்தால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் கூட்டாக
செயற்கைக்கோள் விடுவது வழக்கம்.
2007ல் கோசே என்ற பெயரில்
ஒரு செயற்கைக்கோள் விண்ணில்
ஏவப்பட்டது. அதன் செயலாக்கம்
இப்போது போதுமான எரிபொருள்
இல்லாததால் முடங்கி விட்டது.
விண்ணில் இன்ஜின் இல்லாத விமானம்
போல தடுமாறி,
விண்வெளி சுற்றுப்பாதையில்
தடுமாறியபடி உள்ளது.
88
நிமிடத்துக்கு ஒரு முறை புவிவட்டப்பாதையை சுற்றியபடி,
அதே சமயம் நிமிடத்துக்கு 2.5 மைல்
கீழே சரிந்தபடி உள்ளது. இப்போதும்
அது 113 மைல் தூரத்தில்
மேலே தடுமாறி வருகிறது.
ஒவ்வொரு 88 நிமிடத்துக்கும்
புவி வட்டப்பாதையை சுற்றி வருவதால்
அது கடலிலும் சரி,
பூமி பகுதிகளிலும் சரி வலம்
வந்தபடி உள்ளது. அதனால் அதன் பாகங்கள்
45, 50 ராட்சத துண்டுகளாக
சிதறி விழும் அபாயம் உள்ளது.
அப்படி விழும் போது, அவை, கடலில்
விழ வேண்டும் என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். அதன் இன்ஜின் இயக்கம்
அறவே இல்லாமல் இருந்தாலும்,
அதை ஓரளவு இயக்க முயற்சித்து, கடல்
பகுதியில் வலம் வரும் போது இன்னும்
வேகமாக விழ வைக்க
முடியுமா என்று விஞ்ஞானிகள்
முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், ‘இந்த
செயற்கைக்கோளின்
நூறு டன்னுக்கு மேல் எடை கொண்ட
பாகங்கள் பூமியில் விழும் அபாயம்
உள்ளது. அது எங்கு, எப்போது விழும்,
எப்படி சேதம் ஏற்படுத்தும்
என்பது மதிப்பிட முடியாது’
என்று கூறினர். 2 ஆண்டுக்கு முன்,
அமெரிக்காவின்
நாசா விண்வெளி கழகம்,
புவிஈர்ப்பு பகுதி ஆய்வு செயற்கைக்கோள்
காலாவதி ஆனபோது,
அதை செயலிழக்க செய்தது.
அப்போது துல்லியமாக பசிபிக் கடலில்
அதன் பாகங்களை விழ
செய்து வெற்றி கண்டது.
கடந்த 2011ம் ஆண்டு, செவ்வாயை ஆராய
அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம்
போபஸ்கிரன்ட், பாதி வழியில்
நிலை தடுமாறி பசிபிக் கடலில்
விழுந்தது. இதுபோல, ஐரோப்பிய
செயற்கைக்கோளையும் கடலில்
விழச்செய்ய முடியுமா என்று பல
விஞ்ஞானிகளும்
ஆலோசனை செய்து வருகின்றனர்.
இது பூமியில் விழுந்தாலும் பெரிய
அளவில் சேதம்
உண்டாக்காது என்பது தான் இவர்கள
தரும் நம்பிக்கை.
செயற்கைக்கோள் ஒன்றின் ராட்சத
பாகங்கள், பூமியை நோக்கி வேகமாக
வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றை கடலில் விழ வைக்கும்
முயற்சியில் விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானிகள்
அச்சத்தால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் கூட்டாக
செயற்கைக்கோள் விடுவது வழக்கம்.
2007ல் கோசே என்ற பெயரில்
ஒரு செயற்கைக்கோள் விண்ணில்
ஏவப்பட்டது. அதன் செயலாக்கம்
இப்போது போதுமான எரிபொருள்
இல்லாததால் முடங்கி விட்டது.
விண்ணில் இன்ஜின் இல்லாத விமானம்
போல தடுமாறி,
விண்வெளி சுற்றுப்பாதையில்
தடுமாறியபடி உள்ளது.
88
நிமிடத்துக்கு ஒரு முறை புவிவட்டப்பாதையை சுற்றியபடி,
அதே சமயம் நிமிடத்துக்கு 2.5 மைல்
கீழே சரிந்தபடி உள்ளது. இப்போதும்
அது 113 மைல் தூரத்தில்
மேலே தடுமாறி வருகிறது.
ஒவ்வொரு 88 நிமிடத்துக்கும்
புவி வட்டப்பாதையை சுற்றி வருவதால்
அது கடலிலும் சரி,
பூமி பகுதிகளிலும் சரி வலம்
வந்தபடி உள்ளது. அதனால் அதன் பாகங்கள்
45, 50 ராட்சத துண்டுகளாக
சிதறி விழும் அபாயம் உள்ளது.
அப்படி விழும் போது, அவை, கடலில்
விழ வேண்டும் என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். அதன் இன்ஜின் இயக்கம்
அறவே இல்லாமல் இருந்தாலும்,
அதை ஓரளவு இயக்க முயற்சித்து, கடல்
பகுதியில் வலம் வரும் போது இன்னும்
வேகமாக விழ வைக்க
முடியுமா என்று விஞ்ஞானிகள்
முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், ‘இந்த
செயற்கைக்கோளின்
நூறு டன்னுக்கு மேல் எடை கொண்ட
பாகங்கள் பூமியில் விழும் அபாயம்
உள்ளது. அது எங்கு, எப்போது விழும்,
எப்படி சேதம் ஏற்படுத்தும்
என்பது மதிப்பிட முடியாது’
என்று கூறினர். 2 ஆண்டுக்கு முன்,
அமெரிக்காவின்
நாசா விண்வெளி கழகம்,
புவிஈர்ப்பு பகுதி ஆய்வு செயற்கைக்கோள்
காலாவதி ஆனபோது,
அதை செயலிழக்க செய்தது.
அப்போது துல்லியமாக பசிபிக் கடலில்
அதன் பாகங்களை விழ
செய்து வெற்றி கண்டது.
கடந்த 2011ம் ஆண்டு, செவ்வாயை ஆராய
அனுப்பப்பட்ட ரஷ்ய விண்கலம்
போபஸ்கிரன்ட், பாதி வழியில்
நிலை தடுமாறி பசிபிக் கடலில்
விழுந்தது. இதுபோல, ஐரோப்பிய
செயற்கைக்கோளையும் கடலில்
விழச்செய்ய முடியுமா என்று பல
விஞ்ஞானிகளும்
ஆலோசனை செய்து வருகின்றனர்.
இது பூமியில் விழுந்தாலும் பெரிய
அளவில் சேதம்
உண்டாக்காது என்பது தான் இவர்கள
தரும் நம்பிக்கை.
