விதிகளை மீறி நடக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்
சரியாக படிக்காத
மாணவர்களை தனி
தேர்வர்களாக எழுத வைத்தல்

அல்லது மாற்றுச்சான்று
கொடுத்தல் என புகார் -
விதிகளை மீறி நடக்கும்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என
மெட்ரிகுலேஷன்
பள்ளி இயக்குனர்
பிச்சை தெரிவித்துள்ளார்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சரியாக
படிக்காத மாணவர்களை தனி தேர்வர்களாக
எழுத வைக்காதீர்கள் என்று மெட்ரிகுலேஷன்
பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளாக இருந்தாலும்,
தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளாக
இருந்தாலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக
இருந்தாலும் அனைத்து பள்ளிகளுக்கும்
ஒரே பாடத்திட்டம் தான் அமலில் உள்ளது.
சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள்,
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2
தேர்வுகளில் 100 சதவீத
தேர்ச்சி பெறவேண்டும்.
அவ்வாறு பெற்றால்தான் தனது பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
என்று எண்ணுகிறார்கள். சில மாணவர்கள்
தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில்
இருப்பார்கள். அப்படிபட்ட மாணவர்கள்
பெயிலானால் தேர்ச்சி சதவீதம் 100
வராது என்று எண்ணி தேர்ச்சி பெறுவது
கடினமாக உள்ள
மாணவர்களை தனி தேர்வர்களாக
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2
தேர்வை எழுதவைக்கிறார்கள். அவர்கள்
தனி தேர்வர்களாக எழுத விருப்பம்
இல்லை என்றால்
மாற்றுச்சான்று கொடுக்கப்படுகிறது.
இது குறித்த புகார்கள் மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் இயக்குனரகத்திற்கு வந்தன.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் இயக்குனர் பிச்சை வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்–2 வகுப்பில்
படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு இந்த
கல்வி ஆண்டில் பெற்றோர்களின் விருப்பம்
இன்றி மாற்றுச்சான்று வழங்கி அவர்களை
அரசு பொதுத்தேர்வில் கலந்துகொள்ள
முடியாமல் செய்யக்கூடாது.
இது மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குனரகத்தில்
இருந்து அனைத்து மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் முதல்வர்களுக்கு விரிவான
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் முதல்வர்களின்
கூட்டங்களில் எக்காரணம் கொண்டும் 10, 12
வகுப்பு மாணவர்களை தனி தேர்வர் என
விண்ணப்பித்து தேர்வு எழுத
வற்புறுத்தக்கூடாது என
தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் 10–வது வகுப்பு அல்லது பிளஸ்–2
படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் குறைவாக
பெற்ற காரணத்தால் தனி தேர்வர்களாக
தேர்வு எழுதும்படி மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் வற்புறுத்துவதாக மெட்ரிகுலேஷன்
பள்ளிகளின் இயக்குனருக்கு மின் அஞ்சல்
மூலம் புகார் வந்துள்ளது.
எனவே எக்காரணம் கொண்டும்
தனி தேர்வர்களாக தேர்வு எழுதவைக்கவோ,
மாற்றுச்சான்று கொடுக்கவோ கூடாது.
பெற்றோர்கள் எதுவாக இருந்தாலும்
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
இயக்குனரகத்திற்கு தொலைபேசியில் புகார்
செய்யலாம். தொலை பேசி எண் 044–28270169
எஸ்.எம்.எஸ். தகவலை 9443574633 என்ற
நம்பருக்கு அனுப்பலாம்.
விதிகளை மீறி நடக்கும் மெட்ரிகுலேஷன்
பள்ளிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குனர்
பிச்சை தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...