மரத்தில் இருந்து இலை விழுவதை போல, இவருக்கு ஓவியம் இயல்பாக கைவருகிறது. மன்னிக்கவும்., கைகளால் மட்டுமல்ல, கால் விரல்களால்,
நாசித்துவாரங்களால், இதழ்களால் கூட, இவரால் வரைய முடிகிறது.இசை, பாடல், பலகுரல் பேச்சு என, கலைகளின் பல்வேறு பரிமாணங்களை தேடி பயணம் செய்யும் இவரிடம் கேட்டால், ''கலைகள் எல்லாம் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை தானே! என்னை பொறுத்தவரை ஓவியம் என்பது துாரிகைகளால் தீட்டப்படும் கவிதை,'' என்கிறார்.
இந்த பலகலை மன்னன், அரும்பாக்கவாசி, கூடல் கண்ணன். அவருடனான உரையாடலில் இருந்து...
ஓவியத்திற்கு முன்?
மதுரை தான் பூர்வீகம். சின்ன வயசில் இருந்தே படிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லை. 10ம் வகுப்பு முடித்த பின்னர், படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது.குடும்ப சூழல் காரணமாக, சுண்ணாம்பு அடித்தல், தச்சு வேலை உட்பட ஏராளமான வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில், அத்தனை வேலைகளும் அலுத்துப்போக, எனக்கான பாதை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அப்போது ஓவியம் என் தேடலானது.
ஓவியராக இனம் கண்டுகொண்டது எப்போது?
நீங்கள் பிறந்தவுடன் முதல் வார்த்தை எப்போது பேச ஆரம்பித்தீர்கள் என்று கூற முடியுமா? அதே போல தான். எனக்கு, எப்போது ஓவிய ஆசை துளிர்விட்டது என்று, எனக்கே தெரியவில்லை. அதை நான் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும் இல்லை.ஆனால், 10ம் வகுப்பு முடித்து பல்வேறு வேலைகளால் அலைக்கழிக்கப்பட்ட காலத்தில், சாதாரணமாக என்னுள் இருந்த ஓவிய ஆசை, அதிவேகமாக வளர்ந்தது.கையில் கிடைத்த சோடா மூடி, பாட்டில் மூடிகளில் ஓவியம் வரைய ஆரம்பித்தேன்.
அதன் பிறகு?
ஓவியம் என்பது தான் எனக்கான அடிப்படை திறமை. ஒரு கையால் மட்டுமின்றி, இரு கைகளால், இரு கால்களால், மூக்கின் துவாரத்தால், ஏன் வாயாலும் என்னால் வரையமுடியும் என, அறிந்து கொண்டேன்.வாயில் எழுதுகோல் வைத்து, பாடல் பாடிக்கொண்டே, சைக்கிளில் பயணம் செய்து கொண்டே வரைவேன். ஓவியத்தை போலவே, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளை நேராக மற்றும் தலைகீழாக எழுதுவேன்.மேலும், பிரபலங்கள் மட்டுமின்றி, விலங்குகள் உட்பட பல்வேறு குரல்களை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிப்பேன்.
உங்கள் இலக்குதான் என்ன?
எனக்கென்று எந்த இலக்கும் கிடையாது. எனக்கு பிடித்த மாதிரி என் வாழ்க்கையை வாழ்கிறேன். ஓவியத்தில் துவங்கி, சில கலைகளையாவது, கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
ஆனால், ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு கின்னஸ் சாதனை செய்ய ஒரு திட்டம் இருக்கிறது.பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பகுதி நேரமாக, மாணவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுக் கொடுக்கிறேன். இது தவிர, கருத்தரங்கங்கள், விழாக்களில் எனது இந்த அடிப்படை திறமைகளை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை செய்து வருகிறேன்.என் அம்மாவும் சரி, திருமணத்திற்கு பிறகு மனைவியும் சரி... என்னை நன்றாக புரிந்து வைத்துள்ளனர் என்பதால், என் வாழ்க்கை சூழப்பட்டு உள்ளது. அதனால், எனக்கு பெரிய பொருளாதார சிக்கல்கள் கிடையாது.
கலை என்பது கலைக்காகவா, வருமானத்திற்காகவா?
இங்கே, வருமானம் தராத எந்த கலையும் பொதுவாக கலையாக போற்றப்படுவதில்லை. என் ஆத்ம திருப்திக்கு ஓவியம் வரைகிறேன். அந்த கலை, அடுத்தவர்களின் ஆத்மாவை தொடும் வகையில் இருந்தால், அது எனக்கான வருமானமாக மாறுகிறது.என்னை பொறுத்தவரை உயிர் வாழ்வதற்காக, கொஞ்சம் சாப்பிட விருப்பம். சாப்பிடுவதற்காக மட்டுமே உயிர்வாழ விரும்பாத