ஈஃபில் கோபுரம் (Paris)

பரிஸில் (Paris) உள்ள ஃப்ரான்சின் (France)
முக்கிய சின்னமான ஈஃபில் கோபுரம்
( Eiffel Tower) 7 உலக
அதிசயங்களில்
ஒன்றாகும்.
பொறியியலாளர் குஸ்ரவ் ஈஃபில் (Gustave
Eiffel) என்பவரால் 1887 ஆம்
ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1889 ஆம்
ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
சுமார் 300 மீட்டர் உயரமுடைய இந்த
கோபுரத்தை 300 வேலையாட்கள் 18000
இதற்கு மேற்பட்ட
உருக்கு கம்பிகளை ஒட்டியதன் மூலம்
உருவாக்கினார்கள். ( கோபுர
கட்டு மானத்தின்
போது ஒரு தொழிலாளி இறந்தார்.
ஆனால் இது ஏனைய கட்டுமான
அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில்
மிகக்குறைந்த இறப்பாகும்.)
7300 டன் நிறைக்கு அதிகமான
நிறைகொண்ட இந்த கோபுரம் கடும்
வெப்பத்தின் போது ஏற்படும் உலோக
விரிவினால் கணிசமான
சென்டி மீட்டர்கள் உயர
அதிகரிப்பை காட்டுகின்றது. ( 6-9
சென்டி மீட்டர்களாக இருக்கும் என
கணிக்கப்பட்டுள்ளது. )
ஈஃபில் இந்த கோபுரத்தை கட்டும்
போது மக்களிடையே இது அசிங்கமானது தேவையற்ற
செயல் என நிராகரிக்கப்பட்டது. எனினும்
இன்று உலகின் பல பகுதிகளில்
இருந்தும் மக்கள்
விரும்பிச்சென்று பார்வையிடும்
முதல் தர இடமாக மாறியுள்ளது.
ஆரம்பத்தில் 20 ஆண்டுகால
பாவணைக்கே கோபுரம்
அமைக்கப்பட்டது. பின்னர்,
வரவேற்பை கருத்திற்கொண்டு நிரந்தரச்சின்னமாக
அறிவிக்கப்பட்டது.

3 அடுக்குகளைக்கொண்ட இந்த
கோபுரத்தில் முதல்
இரண்டு அடுக்குகளிலும் உணவகங்கள்
இருக்கின்றன.
முதல் இரண்டு அடுக்குகளுக்கும் மின்
தூக்கி மூலமாகவோ அல்லது படிகளின்
மூலமாகவோ ஏறலாம். ஆனால் 3
ஆவது அடுக்கிற்கு மின் தூக்கியால்
மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

3 ஆவது அடுக்கில் உலக நாடுகளின்
கொடிகளும் ஈஃபில் கோபுரத்தில்
இருந்து நாடுகள் இருக்கும்
திசைகளும் தூரங்களும்
குறிப்பிடப்பட்டுள்ளன! உச்சியில்
இருந்து பார்த்தால் சுமார் 72
கிலோமீட்டர் அளவிற்கு பரிஸின்
அழகை ரசிக்க முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...