10ம் வகுப்பு மாணவியை 2வது திருமணம் செய்ததாக புகார் : அரசு பள்ளி ஆசிரியர் இடமாற்றம்

 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை அங்கு பணியாற்றிய அறிவியல் பிரிவு ஆசிரியர் ஆறுமுகம் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. குழந்தை திருமணம் செய்து கொண்ட அந்த அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர் ஆறுமுகம் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கும், பென்னாகரம் போலீசாருக்கும் புகார் வந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி, மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்தார். கல்வித்துறையின் நடவடிக்கையின்பேரில், அரூர் புதுப்பட்டி அரசு பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி தர்மபுரி மாவட்ட முதன்மைக்க்கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், ‘‘மாணவியை குழந்தை திருமணம் செய்ததாக ஆசிரியர் மீது புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தினோம். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவி தரப்பினர் இதனை மறுத்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில் மோதிரம் மாற்றி மாணவியை ஆசிரியர் 2வது திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் ஆசிரியர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,‘‘ என்றார்.சர்ச்சையில் சிக்கிய 37 வயதான ஆசிரியருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது, மனைவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

எக்ஸ்ட்ரா தகவல்:

தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை 40 குழந்தை திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...