எட்டையபுரத்தில் பாரதியாரின் 132வது பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டம் பாரதி பிறந்த ஊரான எட்டையபுரத்தில் பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தனது உணர்ச்சி மிக்க கவிதைகள் மூலம் முக்கிய பங்கு வகித்தவர் பாரதியார். அவரின் 132வது பிறந்தநாள் விழா எட்டையபுரத்தில் கொண்டாடப்பட்டது. தமிழக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதியார் மணி மண்டபத்தில் இருந்து அவரது இல்லம் வரை
ஊர்வலமாக சென்றனர். அங்கு கவிதைகள் படித்தனர். சிறந்த எழுத்தாளர்களுக்கு பாரதி விருது வழங்கப்பட்டது. பாரதியார் நினைவு அறக்கட்ளை சார்பில், பாரதியார் அவரது மனைவி செல்லம்மாள் போல் வேடமணிந்த பள்ளிக்குழுந்தைகளின் ஊர்வலம் நடந்தது. டி.ஆர்.ஓ., முத்து, துணைக்கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் பலர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். "மகாகவி பாரதி இன்று வந்தால்' என்ற தலைப்பில் இளசை சுந்தரம் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...