"லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்ஸ் பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்ஸ் பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50
அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயர திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டு காகிதங்களை கொண்டு செய்தனர். இதற்காக, தலா, 200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் பாட்டில்கள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம் வார்னிஷ் காகிதம் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மணி நேரத்தை இலக்காக கொண்டு, காலை, 9:30 மணிக்கு துவங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தை பதிவு செய்தனர்.
பள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், ""மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.