யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வு முறையை, மாற்றி அமைக்க கோரி, தேர்வு எழுதுபவர்கள், டில்லியில், பார்லிமென்ட் முன், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'விண்ணப்பதாரர்களுக்கு, கூடுதலாக மூன்று
முறை எழுதவும், வயது வரம்பை மூன்று ஆண்டுகள் உயர்த்தவும், கிராமப்புற தேர்வர்களின் சுமையைக் குறைக்கவும், அறிவுத்திறன் தேர்வை எளிதாக்க வேண்டும்' என, வலியுறுத்தி, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை, போலீசார் கைது செய்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும் என, அவர்கள் கூறினர்.