மதுரையில், திருநங்கை சுவப்ணா, 23, முதன் முறையாக, பாலினம், "பெண்' என,
குறிப்பிட்டு, நேற்று நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில்
பங்கேற்றார். மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த இவர், கல்லூரியில், பி.பி.ஏ.,
முடித்து, தற்போது, மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில், எம்.ஏ.,
தமிழ் படிக்கிறார்.
இதுகுறித்து, சுவப்ணா கூறியதாவது: ஆணா, பெண்ணா என்ற, பாலின பிரச்னையால், அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. பெண் பாலினத்தில், 2011, 2012ல், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். ஆனால், பாலினம் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்து நடந்த தேர்வில் என்னை அனுமதிக்கவில்லை.
பெண் பாலினம் அனுமதிக்க வேண்டும்; திருமணம் செய்தல், குழந்தை தத்தெடுத்தல் போன்ற உரிமைகோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், பங்கேற்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தேன். இதை விசாரித்த கோர்ட், "தேர்வாணையங்களுக்கு, "நோட்டீஸ்' அனுப்பியது. இதற்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் மட்டும், பெண் பாலினத்தில் மனுதாரர் தேர்வு எழுதலாம்' என்று கோர்ட்டிற்கு பதில் அளித்ததன் பேரில், நேற்று, குரூப் 2 தேர்வு எழுதினேன். திருநங்கைகள் பலர், பட்டதாரிகளாக உள்ளனர். அவர்கள், போட்டி தேர்வுகளை எழுத முடியாத நிலையில் உள்ளனர். இந்த முயற்சி மூலம், நாங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளோம். பெண் பாலினம், எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிடைத்த, "முதல் வெற்றி' இது. இவ்வாறு, அவர் கூறினார்.