ஆசிரியர் தகுதி தேர்வு சான்று சரிபார்ப்பு சென்னையில்,தேர்வு சான்று வழங்கல்

தமிழகத்தில்,ஆசிரியர் தகுதியை உறுதி செய்யும் விதத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012ல் தகுதி காண் தேர்வு நடத்தப்பட்டது. இதில், அந்தந்த மாவட்டத்தில்,
தேர்வினை எழுதி, தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்களுக்கு, அந்தந்த சி.இ.ஓ.,க்களே சான்றிதழ்களை சரிபார்த்து, தேர்வுக்கான சான்றுகளை வழங்கியுள்ளனர். அதேநேரம், அந்தந்த மாவட்டங்களில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்காமல், சென்னையில், 2013 ஜூலை மற்றும் அக்டோபரில், சான்று சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சென்னை, அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், டிச.,31 வரை, சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தேர்வு சான்று வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு சான்றுகளை, சென்னை, அசோக்நகர், அரசு மேல்நிலைப்பள்ளியில், நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம், என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Click Here

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...