கல்விக்கடன் வாங்க???

கல்விக்கடனுக்கு எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மூன்று வருடங்களாக தராமல் இருந்தால் கூட முதல் வருடத்தில் விண்ணப்பித்திருந்தால் மூன்று வருடத்திற்கான தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

2.தொழிற்கல்வி சார்ந்த எந்தப் படிப்புக்கும் வங்கிக் கடன் பெற முடியும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் எந்தப் படிப்புக்கும் கடன்பெற முடியும்.

3.உங்கள் அருகில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட எந்த வங்கியையும் அணுகலாம்.

4.விண்ணப்பம் தர மறுத்தால், அந்த வங்கியின் ஆன்லைன் பக்கங்களில் விண்ணப்பத்தைத் தரவிறக்கிக் கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கவும்.

5.பதினைந்து அல்லது முப்பது நாட்களுக்கு மேல் அந்த விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எந்தக் காரணத்திற்காக எனது கல்விக்கடன் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது, எந்த விதிமுறையின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது போன்ற தகவல்களைக் கேட்கலாம்.

6.கல்விக்கடனுக்கு நான்கு லட்சம் வரை எந்த சூரிட்டியும் (பிணை) கொடுக்கத் தேவையில்லை. நான்கு லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை மூன்றாவது நபர் ஒருவர் சூரிட்டி கொடுத்தால் போதும். அதற்கு மேல் கடன் வாங்க சொத்துப் பிணையம் தேவை.

7.வங்கி மட்டுமல்ல, எந்த ஓர் அரசு சம்பந்தமான தொடர்பையும் பதிவுத் தபாலில் கையாளவும்.

8.படித்து முடித்து ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதங்களுக்குள் கடனின் முதல் தவணையைச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் (எது முதலில் வருகிறதோ அதைப்பொறுத்து).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...