'ஸ்வைப்' செய்ய 'பின்' எண் கட்டாயம்: ரகசிய குறியீடு அம்பலமாவதால் அவதி

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வியாபார நிறுவனங்களில் 'ஸ்வைப்' செய்ய, 'பின் நம்பர்' கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், 'பிரைவசி' இல்லாமல், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வங்கியின் வாயிலாக மட்டுமே நடந்து வந்த பணப்பரிமாற்றம், ரகசிய குறியீடு எண் வழங்கப்பட்டு, ஏ.டி.எம்., மற்றும் டெபிட் கார்டுகளால், மிக எளிதானதாக மாறிவிட்டது. வங்கிகளும், ரகசிய குறியீட்டு எண்ணை, ரகசியமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றன. வியாபார நிறுவனங்களில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம், பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ரகசிய குறியீட்டு எண்
கட்டாயமாக்கப்படாமல், பணப் பரிமாற்றம் நடத்த வங்கிகள் அனுமதித்தன. இந்நிலையில், டிச., 1ம் தேதி முதல், அனைத்து வங்கிகளும், ரகசிய குறியீட்டு எண் இல்லாமல், 'ஸ்வைப்பிங்'கில் பணப்பரிமாற்றம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் உள்ள வியாபார இடங்களில், கார்டை கொடுக்கும் வாடிக்கையாளரிடம், ரகசிய குறியீட்டு எண் கேட்கப்படுவதால், பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து, பொதுமக்களில் சிலர் கூறியதாவது: ரகசிய குறியீட்டு எண்ணை, ரகசியமாக வைத்துக் கொள்ளவும் என, வங்கிகள் வலியுறுத்துகின்றன. வியாபார நிறுவனங்களில், அதிலும் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், நாம் வழங்கும் ரகசிய குறியீட்டு எண் எந்த அளவுக்கு ரகசியமாக வைக்கப்படும் என்பது கேள்விக்குறி. அதிலும், அனைத்து கடைகளிலும் கேமிரா உள்ளதால், நாம் ரகசிய குறியீட்டு எண், உள்ளீடு செய்வதும் பதிவு செய்யப்படுகிறது. இதனால், நம் வங்கிக் கணக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது. ரகசிய குறியீட்டு எண் தெரிந்தவர்கள் மூலம், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு திருடப்படும் போது, அதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புக்கு, வங்கி எந்த பொறுப்பும் ஏற்காது என்பது தான் வேதனை. தற்போது, கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குவது பழகிவிட்டதால், அதையும் உடனடியாக நிறுத்த முடியவில்லை. வங்கிகள் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கை பாதுகாப்பதில், அதிக கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...