கன்னியாகுமரியில் அணு விஞ்ஞானிகள் கருத்தரங்கம்

இந்திய அணுசக்தி கழகம் சார்பில், அணுசக்தி பாதுகாப்பு குறித்த, மூன்று நாள் கருத்தரங்கம், கன்னியாகுமரியில் நேற்று துவங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்கியதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தபட்ட நிலையில், கடந்த மாதம், சுனாமி குடியிருப்பில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், எட்டு பேர் பலியாயினர். இச்சம்பவத்தை
தொடர்ந்து, பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணுசக்தி பாதுகாப்பு குறித்த, மூன்று நாள் கருத்தரங்கு, கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று துவங்கியது. இதில், ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட அணு விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கருத்தரங்கம் நடக்கும் ஓட்டலில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...