கிரிக்கெட் போல் பந்து வீசி பாடம் நடத்தலாம் மேலூரில் அசத்தும் அரசு பள்ளிஆசிரியர்


:மாணவர்களை பாடத்தைகவனத்துடனும், ஆர்வத்துடனும் படிக்க வைப்பதுடன்,அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை காட்டி, தேர்வில்தொடர்ந்து நூற்றுக்கு நூறுஎடுக்கவைக்கும் நிகழ்வு மேலூர்ரில் நடந்து வருகிறது. இதற்குகாμணம் அμசு பள்ளி ஆசிரியர்சூரியகுமார். அμசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக 8,9,10ம்
வகுப்புகளுக்குசமூக அறிவியல் பாடத்திற்கு ஆசிரியரராக இருக்கிறார். படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம்ஏற்பட என்ன செய்வது? எனசிந்தித்து இவர் உருவாக்கியதே "விளையாட்டுடன் கூடியபடிப்பு'. இதற்கென 10 விளையாட்டுகளுடன் கூடிய பாடவகுப்புகளை நடத்தி வருகிறார்.இவரது வருகையை ஆர்வமுடன் எதிர்நோக்கி மாணவிகள் காத்திருப்பது ஆச்சரியம். அவர்கள் கூறியதாவது: இந்தபாடமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. முழு பாடத்தையும் மனப்பாடம் செய்யாமல்,அர்த்தம் புரிந்து படிக்க வைக்கிறார். புத்தகத்தில் எந்த வரியைகேட்டாலும், அதை சட்டெனகண்டுபிடித்து விடும் தன்மை எங்களுக்கு உள்ளது. தொடர்ந்துநாங்கள் இந்த பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து வருகிறோம், என்றனர். ஆசிரியர் சூரியகுமார்:படிப்பு எனது உயிர் மூச்சு.எம்.ஏ., ஆங்கிலம், தமிழ், வμலாறு, எம்.எட்., பி.எச்.டி.,முடித்துள்ளேன். மாணவர்களுக்கான புத்தகம், கவிதைதொகுப்பு, கதை, போட்டி தேர்வு கையேடு என 15 புத்தகங்கள் இதுவரை எழுதி உள்ளேன்.இன்றைய மாணவர்களின்ஆர்வம் "டிவி' பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவதில்உள்ளது. இவர்களுக்காக படிப்பையே, அவர்களுக்கு பிடித்தமாதிரி கொடுத்தால் என்ன?என்ற எண்ணத்தில் தோன்றியதுதான் "விளையாட்டுடன் கூடியபடிப்பு'.மாணவிகளை இருபிரிவாகபிரித்து, அவர்களுக்கு பிடித்த பெயரில் "டீம்' பெயர் வைத்து,"டிவென்டி டிவென்டி' கிரிக்கெட் மாதிரியில் படிக்க ஏற்பாடுசெய்கிறேன். ஒரு ஓவருக்கு, ஒருமதிப்பெண் கேள்விகள் ஆறுகேட்கப்படும். பதில் சொன்னால், ஒரு ரன் (மார்க்).தொடர்ந்து நான்கு ரன் எடுத்தால், பவுண்டரி என மேலும்நான்கு மார்க் கொடுப்பது, சிக்சர்என்றால்ஆறு மார்க் கொடுப்பதுஎன்னும்போது மாணவிகளிடம் உற்சாகமாக ஒரு போட்டி மனப்பான்மை ஏற்படுகிறது."மேட்ச் த கேட்ச்' வகுப்பில்பந்தை ஒரு மாணவியிடம் வீசி,ஒரு கேள்வி கேட்கப்படும்.பந்தை சரியாக பிடித்து, கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் இரண்டு மார்க். பந்தைநழுவவிட்டாலோ, பதில் தெரியாமல்பந்தை மட்டும் பிடித்தாலோஒரு மார்க். இது படிக்கும்போதுஉடல் நலத்திற்கும் பயன் அளிக்கும்.இது போல், டபிளா, ட்ரிபிளா?, சொல்அல்லது செல்,பால் வீதிப் பயணம், படி,படி,கபடி, என 10 விதமாக பாடம்நடத்துகிறேன்.திருப்பூரில் எனது இந்தமுறையான பாடம் நடத்துவதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. தற்போது பழநி, மேலூரில்சில பள்ளிகளில் இது போல்பாடம் நடத்துவது குறித்து மற்றஆசிரியர்களுக்கு பயிற்சிகொடுத்துள்ளேன்.எந்த அரசு பள்ளிஆசிரியர்கள்கேட்டுக் கொண்டாலும், இலவசமாக இந்த பயிற்சியை நான்(98654 02603) சொல்லி தர தயாராக உள்ளேன்.இந்த முறையில் பாடம் நடத்தும் போது, மாணவர்களை வகுப்பை கவனிக்க நாம் கூறவேண்டியது இல்லை. அவர்களின் முழு கவனமும் வகுப்பில்தான் இருக்கும். ஆசிரியர் மாணவர்களின் உறவு சிறப்பாகஅமைய இது வழிவகுக்கிறது,என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...