‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு


சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (வயது 20). இவர் சென்னை ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர், ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை

கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும், விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக் கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது. அதற்கு, ஆண்டிராய்டு மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான ஆபத்துக்கள், உதவிகளுக்கும் மற்றும் திருட்டு, வழிப்பறிகளை தடுக்கவும் இந்த மென்பொருள் மூலம் போலீஸ் அவசர உதவிக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். அரசு உதவி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அனைத்து மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...