தமிழர்களின் கை விரல் கணிதம்.

விரல் ( கணிதம் ) என்பது பண்டையத்
தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப்
பயன்படுத்திய அளவை முறையின்
அலகுகளில் ஒன்று.

அளப்பதெற்கென்று தனிப்பட்ட
அளவு கருவிகளை முழுவதுமாகச்


சார்ந்திராமல், தமது உடம்பின்
பாகங்களைக் கொண்டு அன்றாட
வாழ்க்கையில் தேவைப்படும்
பொருட்கள் , ( கயிறு , கம்பு, துணி . . . )
நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட
பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம்
( ஓரளவு சிறியதான )
ஆகியவற்றை அளக்கும் வழமையைத்
தமிழர்கள் கொண்டிருந்தனர் .

அவர்கள்
பயன்படுத்திய அலகுகளுள்
விரற்கடை , சாண் மற்றும் முழம்
ஆகியவை பரவலானவை .
ஒவ்வொரு மனிதருக்கும் உடல்
அளவுகள் மாறுபடும் என்பதால்
விரற்கடை , சாண் மற்றும் முழம்
ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம்
அளக்கும் ஆட்களைப்
பொறுத்து மாறுபடும்
தன்மையுடையது என்றாலும்
சாதாரண மக்களும் எளிதாக
பயன்படுத்தக்கூடிய
ஒரு அளவை முறையாக
உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதரின் கையில்
அமைந்துள்ள ஒரு விரலின் அகலம் ,
ஒரு விரல்
அல்லது விரற்கடை அளவாகும் .
நமது வலது கையில்
கட்டை விரலை மடித்துக்
கொண்டு மற்ற
நான்கு விரல்களையும்
ஒட்டினாற்போல வைத்தநிலையில்
ஆட்காட்டி விரலுக்கும்
சுண்டு விரலு. . . க்கும் இடைப்படும்
அகலப்போக்கான
அளவு நான்கு விரற்கடை எனப்படும் .

இருபத்து நான்கு விரல்
கொண்டது ஒரு முழம் ஆகும். விரல்
பன்னிரண்டு கொண்டது ஒரு சாண்.
சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.
1 விரல் = 1 / 24 முழம் = 1 / 24 * 18 அங்குலம்
= 3/ 4 அங்குலம்
1 விரல் = 1 / 12 சாண் = 1 / 12 * 9 அங்குலம்
= 3 / 4 அங்குலம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...