உள்ளங்கையில் உருகும் உலோகம்.

தனிம அட்டவணையில் காணப்படும்
உலோகங்களில் 31 ஆம் இலக்கம்
கொண்டதுதான் கல்லியம் (Gallium ) என்ற
ரசாயன உலோகம். கையில் நீங்கள்
அதனை போதியளவு நேரத்திற்கு ஏந்திக்
கொண்டிருந்தால் , அது உங்கள்


உள்ளங்கையிலேயே உருகிப்போகும். இதன்
உருகுநிலை வெறும் 29 . 76
டிகிரி செல்ஸியஸ் மட்டுந்தான் .

பிரான்சு நாட்டின்
ரசாயவியலாளரான Boisbaudran
என்பவரால் 1875 ஆம் ஆண்டு இந்த
உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் , பிரான்சின் புராதன
பெயரான Gaul என்ற
பெயரை நினைவுகூறும்
வகையில் இதற்கு கல்லியம் என பெயர்
சூடப்பட்டது .

இந்த உலோக இருப்பும் அதன்
இயல்புகள் பற்றிய விஷயங்களும்
தனிம அட்டவணையின்
உருவாக்குநர் மென்டலீவினால்
எதிர்வு கூறபட்டிருந்ததும்
கவனிக்கத்தக்கது .

இது வெளிச்சமான
வெள்ளி உலோகமாய்
தோன்றுவதோடு ,
கண்ணாடி போலவே உடையும்
தகவும் கொண்டது . ஆனாலும்,
ஏனைய சில
உலோகங்களின் தாக்கத்திலீடுபட்டு ,
அவற்றின்
கட்டமைப்பையே சீர்குலையச்
செய்யும் வீரிய ஆற்றலும்
இதற்குண்டு . இதன் இணைப்பால்
சீர்குலையும் ஒரு உலோகமாக
அலுமினியத்தைக்
குறிப்பிடலாம். உறையும் போது ,
விரிவடையும் தகவுடைய
ஒரு சில அரிதான பதார்த்தங்களுள்
கல்லியமும் ஒன்றாகும் .

நீரும்
உறையும் நிலையில்
விரிவடையும் .
அலுமினியத்தோடு சேர்ந்த
நிலையில் உருவாகின்ற இதன்
விளைவுச் சேர்மானம்,
எதிர்காலத்தில் கார்களின்
எரிபொருளாகப் பயன்படலாம் என
எதிர்கூறப்படுகிறது .

கல்லியம் போலவே ,
அறை வெப்பநிலையில் திரவமாகக்
காணப்படும் வேறு உலோகங்களாக
பாதரசத்தையும் சீசியத்தையும்
குறிப்பிடலாம். கரையும்
கரண்டி என்றவகையில்
மாயவித்தைகள் காட்டப்படுகின்ற
நிலைகளை நீங்கள்
அறிந்திருக்கலாம் . அந்த நிலைகள் ,
கல்லியத்தைக் கொண்டு செய்த
கரண்டியின்
மூலமே சாத்தியமாக்கப்படுகின்றன .

இந்த கல்லியம் பற்றி தெரியாதவர்கள்
அதனை வித்தை செய்பவரின்
சக்தி என நம்பவிடுகின்றனர் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...