போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா?

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று
பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது . அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம் . அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது . அந்த இணையதளத்துக்கானலிங்க் . http://www.verifyemailaddress.org/ ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை . குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள். அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில் , நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும் . நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா , இல்லை போலியானதா என்ற முடிவு வரும் . குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும் , இல்லை என்றால் not Valid என்றும் வரும் . அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...