அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு மார்ச் 3ம் தேதி பிளஸ் 2 தேர்வு : மார்ச் 26ல் 10ம் வகுப்பு தேர்வு

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் தேதியை அரசு தேர்வுகள் துறை நேற்று அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ல் தொடங்கி
ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன. பிளஸ் 2 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15க்கு முடிவடைகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45க்கு முடிவடைந்தன. ஆனால் இந்த ஆண்டு தேர்வு நேரம் காலை 9.15க்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு தேர்வுகளின் போது, 15 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. அதில் 5 நிமிடம் விடைத்தாளின் முன்பக்கத்தில் பெயர், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்களை எழுத வேண்டும். மீதம் உள்ள 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்க்கவும், தேர்வு எழுதியபிறகு சரிபார்க்கவும் பயன்படுத்த வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை 

நாள்    கிழமை     பாடம்
மார்ச் 3    திங்கள்    தமிழ் முதல்தாள்
மார்ச்  5    புதன்    தமிழ் 2ம் தாள்
மார்ச் 6    வியாழன்    ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7    வெள்ளி    ஆங்கிலம் 2ம் தாள்
மார்ச் 10    திங்கள்    இயற்பியல், பொருளியல்
மார்ச் 13    வியாழன்    வணிகவியல், புவியியல், மனையியல்
மார்ச் 14    வெள்ளி    கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல்,
மார்ச் 17    திங்கள்    வேதியியல், கணக்குப் பதிவியல்
மார்ச் 20    வியாழன்    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 24    திங்கள்    அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில் பாடத் தேர்வு
மார்ச் 25    செவ்வாய்    கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, சிறப்பு தமிழ்.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை 

மார்ச் 26    புதன்    தமிழ் முதல் தாள்
மார்ச் 27    வியாழன்    தமிழ் 2ம்தாள்
ஏப்ரல் 1    செவ்வாய்    ஆங்கிலம் முதல்தாள்
ஏப்ரல் 2    புதன்    ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் 4    வெள்ளி    கணக்கு
ஏப்ரல் 7    திங்கள்    அறிவியல்
ஏப்ரல் 9    புதன்    சமூக அறிவியல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...